பக்கம்:தரங்கிணி.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

காதரீனும், பாகீரதியும் புன்னகையை உதிர்த்தனர்.

"நேரமாய்விட்டது அம்மா! டாக்ஸிக்காரன் சத்தம் போடுவான்' என்று சந்தோஷநாதம் பிள்ளை துரிதப்படுத் தினர் பின், "நீங்கள் எண்ணியிருந்தபடியே எல்லாம் நல்ல விதமாக நடந்துவிட்டது. இல்லையா? வாத்தியார் சார்! உங்களுக்குச் சந்தோஷந்தானே! என, பரமசிவத்தைப் பார்த்துக் கேட்டார்.

"உங்களுக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தை கிடைக்கவில்லை, பிள்ளைவாள்!"

பரமசிவம், ஆனந்தக் கண்ணிர் வடித்தவாறே பதில்

மணமக்கள், கடைசி முறையாக எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு பு றப்பட்டனர்.

அவர்களுக்குப் பின்னே பரமசிவம் தம்பதிகள் புறப்பட முயன்றனர்.

"நீங்கள் இருங்கள். அப்புறம் போகலாம் என்று அவர்களைத் தடுத்து நிறுத்தி, 'தங்கராஜ், எதற்கும் நீ அவர்களுடன் டாக்ளியில் போ. போகும் இடத்தில் என்ன நிலைமை என்று தெரிந்துகொண்டு வந்து சொல்லு. மாப்பிள்ளையின் பெற்ருேர் ஒரே பிடிவாதமாக அவர்களை வீட்டினுள் அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டால், அவர்களே நீ இதே டாக்சியில் திருப்பி நம் வீட்டுக்கு அழைத்து வந்துவிடு. அப்புறம் நடக்கவேண்டியதைப் பார்த்துக் கொள்ளலாம். என்ன சொல்லுகிறீர்கள்? வாத்தியார் சார்!" என்று கேட்டார். - -

"நீங்கள் சொல்வதுதான் சரி. என்ருர் பரமசிவம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/167&oldid=575362" இலிருந்து மீள்விக்கப்பட்டது