பக்கம்:தரங்கிணி.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167

தங்கராஜ் விரைவில் சென்றுமணமக் களுடன் டாக்ளி யில் ஏறிக்கொண்டான்.

அவனுக்கு முன்பே தெருத்திண்ணையண்டை போய் நின்ற ஜோஸப், டாக்ஸியில் வேகமாகச் செல்லும் மணமக் களைப் பார்த்துக்கொண்டே நின்ருன். டாக்ஸி அவன் பார்வையை விட்டு மறைந்தும், அவர்கள் உருவம் அவனுடைய அகக்கண்களை விட்டு அகலவில்லை.

T 4.

'தர்ம ஸம்ஸ்த்தா பஞர்த்தாய சம்பவாமி யுகே யுகே!” குருக்ஷேத்திர மகாயுத்தத்தில், ரீ கிருஷ்ண பரமாத்மா, அர்ஜூனனுக்கு உபதேசித்து அருளிய பகவத் கீதை புத்தகம், இராமகிருஷ்ணன் கரத்தில் இருந்தது, அவருடைய வாய், மேற்படி சுலோகத்தை ஓசையோடு உச்சரித்துக் கொண்டிருந்தது.

"ஒவாது பிறந்திடுவேன் யுகந்தோறும் யுகந்தோறும்." "ஓ! அர்ஜுளு! நான் பிறப்பில்லாதவனயினும், அழி வில்லாதவனயினும், சகல உயிர்களுக்கும் தலைவனுயினும், பல வகையாக அந்தப் பிரபஞ்சம் அனுபவிக்கின்ற அழியுந் துன்பங்களைப் போக்குவதற்காக, உலகத்துடன் சிறிதும் பற்று ஒட்டு இல்லாது நின்று, என் மாயையினலே உண்மையென எண்ணுமாறு உடம்பு தாங்கி, ஒவ்வொரு யுகத்திலும் பிறந்திடுவேன். எப்பொழுது உலகத்தில் தர்மம் சிதைந்து அதர்மம் மிகுகின்றதோ, அப்பொழுது நான் அவதரிக்கிறேன். மேலும், நான், நல்ல மக்களைப் பாதுகாக்கவும், கெட்டவர்களைத் தண்டித்து அடக்கி ஒடுக்கவும், நல்லறத்தை இவ்வுலகில் நிலை நாட்டுவதற்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/168&oldid=575364" இலிருந்து மீள்விக்கப்பட்டது