பக்கம்:தரங்கிணி.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

யுகந்தோறும் என்ன நானே படைத் துக்கொண்டு பிறக்கின்றேன்." . .

தமிழ் விளக்கத்தையும், அவர், அடுத்து நிதானமாகப் படித்துக் கொண்டிருந்தார். . . . ..., இருந்தாற் போலிருந்து கேட்ட காரின் ஹார்ன் சப்தம், மேல்மாடி அறையில் குறுக்கும் நெடுக்குமாக உலாவியவாறு படித்துக்கொண்டிருந்தவரின் கவனத்தை ஈர்த்தது. உடனே அவர் நின்று. ஜன்னல் வழியாகக் கீழே எட்டிப் பார்த்தார். தம் வீட்டின்முன் ஒரு கார் வந்து நிற்பதைக் கண்ட அவர், புத்தகத்தை ஊஞ்சல் பலகைமீது வைத்துவிட்டுத் தன்னைப் பார்க்க யார் வந்திருப்பது என்றும் அறியும் ஆவலோடு, அவசரம் அவசரமாகக் கீழே இறங்கலானர்.

சாளரத்தின் வழியாக உள்ளே படர்ந்த சூரிய வெளிச்சம், இராமகிருஷ்ணன் காதுகளில் போட்டிருந்த வைரக்கடுக்கன் மீதும், விரல்களில் அணிந்திருந்த பச்சைக் கல் மோதிரத்தின் மீதும், சிவப்புக்கல் மோதிரத்தின் மீதும் பட்டு ஜிலு ஜிலுத்தது. அவர் அரையில் பட்டு வேட்டி பளபளத்தது. அவருடைய குடுமி மயிர் காற்றில் பறக்கலாயிற்று. உடம்போடு ஒட்டியிருந்த பனியன் அவரது சரீரச் செழுமையை எடுத்துக் காட்டியது. மிடுக் கான கம்பீரத் தோற்றத்தைப் பார்ப்பவர்கள் யாரும், அவர் ஆயுளில் பாதிவயதைக் கடந்துவிட்டவர் என்று சொல்லமாட்டார்கள். இந்த முதிய வயதில், வேறு எவரா லும் மாடிப்படிகளில் இவ்வளவு வேகமாக இறங்கிவரவே முடியாது."

அவர் உள்ளிருந்து வெளிவராத்தாவுக்கு வருவதற் இசளந்தரராஜன் டாக்சியிலிருந்து இறங்கி, ஆன். உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/169&oldid=575365" இலிருந்து மீள்விக்கப்பட்டது