பக்கம்:தரங்கிணி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

16

சாரதா சொல்லாமல் நிறுத்தியதைப் பாகீரதி நிறைவு செய்தாள்: 'மாதம் முப்பது நாளும் நன்முக உண்டு உடுப்ப தற்குக்கூடத் திரிபுடைதாளம் போடும் ஏழை வாத்தி யாருக்கு அருமை மகளாக, இவ்வளவு செளந்தரியமும் இனிய சாரீரமும் புத்திசாலித்தனமும் உள்ள தரங்கிணி பிறந்திருக்கக் கூடாதுதான். இவ்விஷயத்தில் ஆண்டவன் அநியாயம்தான் செய்துவிட்டான்.”

"நீங்கள் இருவரும் சொல்வதுபோல் தரங்கிணி செல்வந்தர் குடும்பமொன்றில் பிறந்திருந்தால், இப் போதுள்ள பேரழகும், இனிய குரலும், அறிவாற்றலும் அவளுக்கு இருந்திருக்குமோ என்னவோ?’’

'நன்ருய்ச் சொன்னுய், ஐரின் நம் பள்ளியில் படிக் கும் பணக்காரப் பெண்கள் பலரின் லட்சணத்தைத்தான் நாம் பார்த்து வருகிருேமே! அவர்களேவிட அழகிலும் படிப்பிலும் ஏழைப் பிள்ளைகள்தாமே மிகுதியாய் இருக் கிருர்கள்? - -

வானெலி நிலையக் கட்டிட முதற்பகுதியில், அழகாக வைக்கப்பட்டிருந்த குரோட்டன்ஸ் செடிகளுக்கிடையே வளர்ந்திருந்த சூரியகாந்திப் பூக்கள், பகலவன் மேற்றிசை யில் மறைந்து கொண்டிருப்பதைப் பார்த்துச் சோர்வுற்றுத் தலை சாயலாயின. தரங்கிணியும், தான் பிறந்துள்ள குடும் பத்தின் ஏழ்மைநிலையைப் பற்றித் தோழிகள் விமரிசனஞ் செய்வதைக் கேட்டு, முகம் கூம்பினள்.

தரங்கிணியும் அவள் தோழிகளும் லேடி சிவஸ்வாமி ஐயர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி கள். தமிழகமெங்கணும்-சுதந்தரம் பெற்றதற்குப் பின்னர், செப்டம்பர் 11, 12-ந் தேதிகளில் கொண்டாடப் பட்டு வரும் பாரதி நினவுவிழாக் கொண்டாட்டத்தை யொட்டி, மேற்படி பள்ளியிலும் பாரதி பாடல் போட்டியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/17&oldid=1338433" இலிருந்து மீள்விக்கப்பட்டது