பக்கம்:தரங்கிணி.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

தந்தையின் குரலில் உள்ள மாறுதலையுணர்ந்த செளந்தரராஜன், தைரியமுற்றவனுய் எழுந்து, 'ஆம்: அப்பா! அதே பெண்தான்' என்று மெல்லச் சொன்னன்.

தரங்கிணியும் எழுந்து, சேலைத் தலைப்பை இழுத்து விட்டுக் கொண்டு, அடக்க வொடுக்கமாக நின்ருள். -

இராமகிருஷ்ணன் பார்வை அவள்மீது படர்ந்தது. 1 என்ன, கூப்பிட்டீர்களா?'

நீலாய தாட்சியம்மாள், கேட்டுக்கொண்டே, பச்சைப் பட்டுப் புடைவை சரசரக்கச் சமையல் உள்ளில் இருந்து வந்தாள். அவள் பார்வையில், தரங்கிணிதான் முதலில் பட்டாள். t

"யார் இந்தப் பொண்ணு? எங்கோ பார்த்த முகமா யிருக்கிறதே?' என்று கேட்டுக்கொண்டே கணவன் பக்கம் திரும்பியவள், அவருக்கு எதிரில் அடங்கியொடுங்கி நிற்கும் தன் குமாரனைப் பார்த்துவிட்டு, 'நேற்று எங்கே போயிருந்தாய் சுந்தர், சொல்லாமல் கொள்ளாமல்? ஆபீஸில் இவலையிருந்தால், யார் மூலமாயினும் தகவல் சொல்லியனுப்பப்படாதோ? வருவாய், வருவாய் என்று இராத்திரியெல்லாம் கண்விழித்துக் கொண்டிருந்தோம்’ என்று ஆற்ருமையோடு பேசிள்ை. . . . .

இராமகிருஷ்ணன் இடைமறித்து, "உன் அருமை மகன் வேறெங்கும் போகவில்லை. உனக்கு மருமகளைத் தேடுகிற சிரமத்தை வைக்கக்கூடாது என்று, தான்ே தேடிப் பிடித்துக்கொண்டு வந்து விட்டான். அவன் கலியாணத்துக்கென நாம் ஒரு பைசாச் செலவு செய்ய வேண்டியதில்லை. நிலபுலத்தை விற்று ஆயிரம் ஆயிரமாகக் கொட்டிப் படிக்கவைத்தோமே என்று, வரவுக்கும் இனி

நீ எதிர்பார்க்க முடியாது புரிகிறதா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/171&oldid=575367" இலிருந்து மீள்விக்கப்பட்டது