பக்கம்:தரங்கிணி.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17լ

அவருடைய குத்தல் மொழியைக் கேட்டு, தரங்கிணி குன்றிப்போளுள். என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்ற பயத்துடன், அவள் ஒவ்வொரு கணத்தையும் எதிர்பார்த் துக் கொண்டிருந்தாள்.

நீலாயதாட்சியம்மாள், திகைப் பூண்டு மிதித்தவள் போல், ஒன்றும் புரியாமல் நின்று விட்டாள். -

"நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்......... وهج

இராமகிருஷ்ணன் குறும்பாகச் சிரிப்பைச் சிந்தினர். "இப்போது உனக்கு ஒன்றும் புரியாது. பின்னல் போகப் போகத் தெரிந்துகொள்ளலாம். நீ முதலில் உள்ளே போய் வஸந்தாவையும், ஜலஜாவையும் அழைத்துக்கொண்டு, ஆலங் கரைத்து எடுத்துக் கொண்டுவா. நம் வீடு தேடி வந்திருக்கும் லக்ஷ்மியை அதிகநேரம் நிற்கவைத்திருப்பது அபசாரம். அத்துடன், இன்று புதன்கிழமையல்லவா? பன்னிரண்டு ஒன்றரை ராகுகாலம். ராகுகாலம் வருவதற் குள், உள்ளே அழைத்துப்போய், மணமக்களுக்குப் பாலும், பழமும் கொடு."

நீலாயதாட்சியம்மாள், எப்போதும் அகமுடையவரின் பேச்சுக்கு மறுவார்த்தை சொல்லமாட்டாள். ஆதலால், அவள் வேறு மாற்றம் எதுவும் உரையாமல், உடனே உள்ளே போனள். அடுத்த சில கணங்களில், ஜலஜாட்சி யும், வஸந்தாவும் அங்கு வந்து தோன்றினர். அவர்கள், ஆச்சரியத்தோடு, தரங்கிணியைப் பார்க்கலாயினர். - "என்ன? அப்படி பார்க்கிறீர்கள்? உங்கள் அண்ணன் உங்களுக்கு மன்னியைத் தேடிக் கொண்டுவந்திருக்கிருன்; உங்களுக்குப் பிடித்திருக்கிறதல்லவா?”

இராமகிருஷ்ணன், தம் செல்விகளை நோக்கிக் கேட் டார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/172&oldid=575368" இலிருந்து மீள்விக்கப்பட்டது