பக்கம்:தரங்கிணி.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

மல்லிகைப் பூங்கொடிகள் போல் காணப்பட்ட அப் பெண்மணிகள், தங்கள் தோள்களிலிருந்து வழுக்கிவிழும் வங்கப் பட்டுச்சேலைகளின் முந்தானைகளைத் தள்ளிவிட்டுக் கொண்டு, "எங்களுக்குப் பிடித்திருக்கிறதாவா? லக்ஷ்மி விக்கிரகத்தை விரும்பாதவர்கள் உண்டா, அப்பா?...... $零 என்ருர்கள், தரங்கிணிமீது வைத்த விழிகளைத் திரும்பி வாங்காமல். -

"சபாஷ்! சரியாகச் சொன்னீர்கள்!”

நீலாய தாட்சியம்மாள், ஒரு வெள்ளித்தட்டில் ஆலங்

கரைத்து, அதில் கற்பூரத்தை வைத்து ஏற்றிக் கொண்டு வந்தாள். .

வெளியிலிருந்தவாறே உள்ளே நடப்பதை ஒற்றுக் கேட்டு, ஒருவாறு நிலைமையை ஊகித்துக் உணர்ந்து கொண்ட தங்கராஜ். இனி தனக்கு அங்கு ஒன்றும் வேலை யில்லை என்று கருதி, அவ்விடத்தைவிட்டு நீங்கி, டாக்சி யில் ஏறிக்கொண்டு, தங்கள் வீடு நோக்கி விரைந்து ஒட்டச் சொன்னன்.

நீலாய தாட்சியம்மாள் அவ்விடத்துக்கு வரும்போதே; "அவர்களே வாசலண்டை போய் நிற்கச் சொல்லுங்கள்" என்ருள்.

இராமகிருஷ்ணன் சிரித்துக்கொண்டே, "நீ தான் சொல்லேன் என்ருர்.

உடனே ஜலஜாட்சி, செளந்தரராஜனிடம் ஒடி, "அண்ணு, மன்னியை இப்படி அழைத்துக்கொண்டு வந்து நில்" என்று சொல்லி, தரங்கிணியின் மெல்லிய கரத்தைப் பிடித்து, வாசலுக்கு வெளியே அழைத்துப் போனள். வஸந்தா, இருவரையும் ஒன்முக நிற்கவைத்து. கை கோத்துக் கொள்ளச் சொன்னுள். -> .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/173&oldid=575369" இலிருந்து மீள்விக்கப்பட்டது