பக்கம்:தரங்கிணி.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173

செளந்தரராஜன் முகத்தில் புன் முறுவல் தவழ்ந்தது. தரங்கிணியின் முகம் நாணத்தால் குங்குமச் சிவப்பாயிற்று.

நீலாயதாட்சி, மணமக்களுக்கு மூன்றுமுறை ஆலஞ் சுற்றி, மஞ்சள் நீரை விரவில் தொட்டு இருவருடைய நெற்றியிலும் பொட்டாக இட்டுத் திருஷ்டி கழித்து, 'வலது காலை முன்னே எடுத்துவைத்துத் திரும்பிப்பார்க் காமல் உள்ளே போங்கள்' என்று சொல்லிவிட்டு, ஆலத்தை வெளியே ஊற்றிவிட்டுவரப் போனள்.

ஜலஜாவும் வஸந்தாவும், இருபுறம் இருந்து செளந்தரராஜனையும் தரங்கிணியையும் வீட்டினுள் அழைத்துச் சென்றனர். கூடத்தின் சுவரில் பெரியதாக மாட்டியிருக்கும் பூரீராமபிரான் பட் டா பி ஷே க ப் படத்தைக் கைகூப்பிக் கும்பிட்க்கொண்டுடே, செளந்தர ராஜன், தன் வாழ்க்கைத் துணைவியுடன் உள்ளே நுழைந் தான். *

இராமகிருஷ்ணன், கனிவோடு, மகனும் மருமகளும் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். .

வெளியிலிருந்து ஆலத்தட்டுடன் திரும்பி வந்த நீலாயதாட்சி, கணவனுடைய நிலையைக் கண்டு உள்ளுரி மனம் பூரித்தவளாய், நீங்களும் உள்ளே வாருங்கள்" என்று சொல்லிக்கொண்டு போளுள். மனைவியின் பின்னே, இராமகிருஷ்ணன், சிந்தனையுடன் மெல்ல நடந்து செல்ல லானர். -

முற்றுப் பெற்றது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/174&oldid=575370" இலிருந்து மீள்விக்கப்பட்டது