பக்கம்:தரங்கிணி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

18

வந்தனர், காதரீன் முதலிய பள்ளித் தோழிகள். முதலில் அவர்கள் தரங்கிணிக்குக் கிடைத்த தங்கப் பதக்கத்தை யும் பாராட்டுப் பத்திரத்தையும் வாங்கிப் பார்த்தவாறு தங்களுக்குள் பேசிக்கொண்டு வந்தனர். பின்னர்த்தான் செயின்ட் தாமஸ் கான்வென்டை நெருங்கும் சமயத்தில், தரங்கிணியின் மெளனத்தைக் கலைப்பதற்காகப் பாராட்டு மொழிகளை பரிமாறலாயினர்.

அம் மாணவிகள் செந்தோம் நெடுஞ்சாலையில் வட திசைநோக்கித் திரும்புகையில், கீழ்வான ஊடுருவி நிற்பது போலக் காணப்படும் செந்தோம் சர்ச்சின் கண்டாமணி கணகணவென அடித்து, மாலை ஆறுமணியாகி விட்டது என்பதை அறிவித்தது. மாதாகோவில் மணியோசை,கடற் கரை யோரத்தில் வளர்ந்திருந்த தென்னை மரங்களிலும் பங்களாக்களில் வைத்து வளர்க்கப்பட்டுவரும் செடிகொடி மரங்களிலும் அமர்ந்திருந்த பறவைகளை நாலா பக்கமும் பறக்கச் செய்தது. செம்படவர்கள் கடலிலிருந்து செலுத்திவந்த கட்டுமரங்கள் வாயிலாகக் கொண்டுவந்து கொட்டிக் குவிக்கும் மீன்களே, ஏமாந்தால் கொத்திக் கொண்டு போவதற்காகக் கடற்கரையில் வட்டமிட்டுக் கொண்டிருந்த காக்கைகளும் பருந்துகளும், மாதாகோவில் மணி அடிப்பதைக் கேட்டுப் பயந்து, மேல் நோக்கிப் பறக்க லாயின.

செயிண்ட் பேடஸ் கான்வென்டின் பெரிய பெரிய மஞ்சள் கட்டிடங்கள் கண்ணில் பட்டதுந்தான், இம்மாண விகளுக்கும் மனத்தில் தெம்புண்டாயிற்று போலும்! அப் பெண்மணிகளின் பகடிப்பேச்சும் அங்கிருந்துதான் ஆரம்ப மாயிற்று. இப் பெண்களின் இனிய சிரிப்பு ஆரவாரத் தோடு, இடையிலுள்ள பெரிய கிறிஸ்தவப் பள்ளிக் கட்டி டங்கள், மைசூர் மகாராஜா மாளிகை, வானெலி நிலையத் தின் வெளியீட்டு அலுவலகங்கள் முதலியவைகளைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/19&oldid=1338435" இலிருந்து மீள்விக்கப்பட்டது