பக்கம்:தரங்கிணி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

19

தாண்டிவந்து, கடலலையின் ஆரவாரமும் போட்டியிடுவது போல் கேட்கலாயிற்று.

அரசாங்கம் அநாதைப் பெண்களுக்குப் புகலிடமாக நடத்தும் பூரீஸ்தனம் கட்டிடத்தண்டை வரும்போது, சாரதா சொன்னாள்: 'தரங்கிணி, இன்று நீ பரிசு வாங்கிய தும் பாராட்டுப்பெற்றதும் எங்களுக்கு எவ்வளவு பெருமை யாக இருக்கிறது, தெரியுமா? நம் பள்ளியின் தலைமையாசி ரியை நன்றியுரை கூறுகையில் குறிப்பிட்டது நினைவிருக்கிற தல்ல தா! பாரதி பாடல் போட்டியில், எங்கள் பள்ளியில் நான்காவது படிவம் படிக்கும் மாணவியான தரங்கிணி முதல் பரிசு வாங்கியது. ஆசிரியைகளான எங்களுக்கு மட்டு மல்ல, எங்கள் பள்ளிக்கே பெருமை தருவதாகும்' என்று அவர் பூரிப்போடு சொன்னர். அதுபோலப் பத்து மடங்கு பெருமையும் பூரிப்பும் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதில் என்ன சந்தேகம்? விழாத் தலைவர் பாராட்டி யது போல, நம் தரங்கிணி எதிர்காலத்தில் அகில இந்தியப் புகழ் பெறக்கூடிய பெரிய இசைவாணியாகப் போகிருள். அப்பேர்பட்டவளுக்குத் தோழிகள் என்று சொல்லிக் கொள்ளுவதில், நமக்குள்ள உரிமையும் பெருமையும் வேறு யாருக்குக் கிடைக்கும்?

உள்ளங்கொள்ளா மகிழ்ச்சியோடு காதரீன் சொல்லிக் கொண்டே, தரங்கிணியின் தோள்களை அன்போடு இறுகப் பற்றினுள். தரங்கிணி எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் பரவசத்தில், உன்னை அப்படியே கட்டிப்பிடித்து உச்சி மோந்து முத்தமிட வேண்டும் என்று உள்ளந் துடிதுடிக் கிறதடி நடு வீதியாய் இருக்கிறதே என்று பார்க்கிறேன்.

காதரின், மற்றத் தோழிகளைவிடத் தன்னிடம் மிகுந்த பேரன்பு கொண்டிருப்பவள் என்பதை, தரங்கிணி நன்கு அறிவாள். ஆதலால், அவள் தன் மன உணர்ச்சியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/20&oldid=1338436" இலிருந்து மீள்விக்கப்பட்டது