பக்கம்:தரங்கிணி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

20

வெளிப்படுத்தியபடி, எங்கே அவள் நாலுபேர் நடமாடும் இந்த வீதியில், தன்னைச் சேர்த்தனைத்து முத்தமிட்டு விடு வாளோ என்று அஞ்சி ஒதுங்கிப் போகலானள். நல்லகாலம் இச்சமயம் எதிர்ப்புறத்திலிருந்து வேகமாக வந்த ஒரு சைக்கிள், ஒரடி தள்ளிப் போயிருந்தால், அவள்மீது மோதி

யிருக்கும்.

மாலை மயங்கி இருள் பரவும் அந் நேரத்திலும், சைக்கிள் சவாரி செய்துவந்த இளைஞனொருவன், சாமர்த்தி யமாகப் பிரேக் போட்டுத் தன் வாகனத்தை நிறுத்த முயன்றன். ஆனாலும், சைக்கிள் தரங்கிணியை மோதி விட்டுத்தான் நிற்கும் போலிருந்தது. ஆகவே, அவன் அடடே யாரது, நடுரோட்டில் ஆட்டம் போடுவது? நாலு பேர் நடமாடும் வீதியை உங்கள் வீடென்று நினைத்துக் கொண்டீர்களா? என்று கூறிக் குரல் கொடுத்து கொண்டேவந்து, சைக்கிள் பெடலை வலக்காலால் அழுத்தி நிறுத்த முயன்முன். அவனுடைய ஒருகரம் தரங்கிணியைப் பிடித்து, ஒரு பக்கம் மெல்லத் தள்ளலாயிற்று.

இந்த எதிர்பாராத நிகழ்ச்சியைக் கண்டு, தரங்கிணி அதிர்ந்து போளுள். அவளுடைய தோழிகள் பயந்து கூச்ச

லிடலாயினர். -

இதற்குள் சைக்கிளில் வந்த வாலிபன் தன்னைச் சமா

வித்துக் கொண்டான்; மறுபடியும் சைக்கிளில் ஏறிக் கார ணிசுவரர் கோவில் தெருப்பக்கமாகத் திருப்பிச்செலுத்திப் போகுமுன், "பாதையில் நடக்கையில் நாலு பக்கமும் பார்த்துப் போகவேண்டும். இப்படிக் கண்ணை மூடிக் கொண்டு நடுவீதியில் கொட்டம் அடிக்கக்கூடாது. தெரி

கிறதா சைக்கிளாய் இருந்ததால் தப்பினர்கள். காரா யிருந்தால் உங்கள் கதி என்ன ஆகியிருக்கும்?...” என்று காட்டமாகப் பேசிவிட்டுச் செல்ல முயன்முன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/21&oldid=1338437" இலிருந்து மீள்விக்கப்பட்டது