பக்கம்:தரங்கிணி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

21

"சைக்கிளில் வரும் நீதான் பார்த்து வருவதற்கென்ன?

திருப்பத்தில் மணி அடித்துக்கொண்டு மெதுவாக வரக் கூடாதா? ஏரோப்ளேனில் பறப்பதாக ஐயாவுக்கு நினைப்புப் போலிருக்கு."

"யாரு, காதரீன? இரட்டைவால் குரூப்பா? அது தான் இப்படி ...” -

இருவரும் பேசிய தோரணையிலிருந்து, ஒருவர் முகம் மற்றவருக்குத் தெரியாத இருள் படரும் நேரத்திலும், ஒருவரையொருவர் இனங்கண்டு கொண்டார்கள் என்று மற்றவர்கள் தெரிந்துகொண்டனர்.

'சரி சரி. வாயை மூடிக்கொண்டு போ, ஜோஸப்!...”

ஜோஸப் காதரீனுடனிருந்த பெண்களைக் கூர்ந்து கவ னித்துவிட்டுப் போகலானன். யார்மீது தன் சைக்கிள் மோதிவிடப் போகிறது என்று அஞ்சிப் பரபரப்போடு தள்ளிஞனே அந்தப் பெண்ணைக் குறிப்பாகப் பார்த்ததும் ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டான். அவன் தொட்டுத் தள்ளியபோது, ஏற்படாத உணர்ச்சியும் புல்லரிப்பும் இப் பார்வையின்போது அவனுக்கு உண்டாயிற்று. தரங்கிணி யின் பேரழகு அவனைக் கிறுகிறுக்க வைத்தது. அதைச் சமாளிக்க முடியாமல், அவன் வேகமாகச் சைக்கிளைச் செலுத்திக்கொண்டு, அவ்விடத்தை விட்டுப் போய் விட்டான்.

முன்பின் அறியாத யாரோ ஒருவன் தன்னைத் தொட் டுத் தள்ளியதால், அதிர்ச்சியும் அருவருப் புங் கொண்ட தரங்கிணி, அவன் தொட்ட இடத்தைத் தன் கையால் தட்டிக்கொண்டே, காதரீனப் பார்த்து, யாரடி, அவன்? பலே போக்கிரியாயிருப்பான் போலிருக்கே! பெண்களைத் தொடக்கூடாது என்ற உணர்வுகூட இல்லாமல்...... 3 - என்று முகச் சுளிப்போடு சொன்னாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/22&oldid=1338438" இலிருந்து மீள்விக்கப்பட்டது