பக்கம்:தரங்கிணி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

33

'ஆபத்துக்குப் பாபமில்லையடி.'

"அவன் அப்படித் தள்ளாமல் இருந்தாலல்லவா தெரிந் திருக்கும்? அவன் சைக்கிளில் அடிபட்டு, நீ சட்டினியா யிருப்பாய்...:

"நம்ம கண்களேதானடி பட்டு, தரங்கிணிக்கு இந்த ஆபத்து ஏற்பட்டது."

ஆளுக்கொரு பேச்சுப் பேசினர்.

என் சகோதரனைப் பார்த்தால் உனக்குப் போக்கிரி யாக்வா தோன்றுகிறது?’’

"யாரு, அவன் உன் சகோதரன? காதரீன், மன்னிச்சிக்கோடி!.

தரங்கிணி தவறு செய்தவள் போலத் திகைத்து நின்று விட்டாள்.

'பரவாயில்லையடி தெரிந்தா சொன்னுய்?' என்ருள். காதரீன்.

இச் சமயம், கடற்கரையின் இருமருங்கிலும் இருந்த மெர்க்குரி விளக்குகள் ஏககாலத்தில் பிரகாசிக்கலாயின. அவற்றின் பேரொளியில் அப் பெண்கள் தேவகன்னிகை கள்போல் விள்ங்கலாயினர். தரங்கிணி இந்திராணிபோல் எழிலுடன் தோற்றமளித்தாள்.

பொன்னுருகக் காய்ந்து, மண்ணுருகப் பெய்யும்' என்று முதியவர்கள் சொல்லிவரும் பழமொழியை மெய்ப் பிப்பதுபோல் இருந்தது, புரட்டாசி மாதத்திய காலை வெய்யில். முகத்தைத் தீய்க்கும் அந்த வெய்யிலையும் பொருட்படுத்தாமல், மயிலாப்பூர் பெரிய கடைவீதியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/23&oldid=1338439" இலிருந்து மீள்விக்கப்பட்டது