பக்கம்:தரங்கிணி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

23

நடுவே இருந்த ஒரு வீட்டிலிருத்து, அறுபது வயதுக்கு மேற் பட்ட பாட்டியொருத்தி, தள்ளாடித் தள்ளாடி மெல்ல நடந்தவாறு, அதே வாடையின் கோடியிலிருந்த ஒரு சிறு வீட்டினுள் நுழைந்தாள். அவ்விதம் நுழையும்போதே, 'காமாட்சி, காமாட்சி' என்று கூப்பிட்டுக் கொண்டே போனள். நடையைக் கடந்து தாழ்வாரத்தின் ஒரு மூலை யில் இருந்த சிறு அறையின் ஒருக்கணித்திருந்த கதவோரத் திலிருந்து, ஒர் இளம்பெண்ணின் முகம் குரல் கொடுத்து வந்த கிழவியை எட்டிப்பார்த்து விட்டு, உள்ளுக்கு இழுத்துக் கொண்டது. கூடத்தில் கயிற்றுக்கட்டிலில் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தவரும் குரல் கொடுக்க வில்லை. தன் குரலுக்கு எதிரொலி ஏற்படாது போகவே, "வீட்டில் யாருமில்லை போலிருக்கிறதே! காமாட்சி எங்கே யாயினும் வெளியே போயிருக்கிருளா? என்று. அம் மூதாட்டி தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள். அடுக்களையிலிருந்த சொய்' என்ற தாளிப்புச் சப்தமும் மணமும் கிழவியின் செவியையும் மூக்கையும் தாக்கவே. அவள் தயங்கி நின்ருள்.

'காலை பந்து மணிக்குள்ளாகவே சாப்பாட்டு வேலை யெல்லாம் முடிந்திருக்குமே! இன்று என்ன என்றுமில்லாத அதிசயமாகப் பதினெரு மணிக்கு மேலாகியும் சமையல் நடந்து கொண்டிருக்கு, காமாட்சி என்று பாட்டி உரத்த குரலில் கேட்டுக்கொண்டே, அடுக்களையை நோக்கிப் போளுள். - அடுத்தகணம் சமையல் உள்ளிருந்து கையில் கரண்டி யுடன் வெளியே எட்டிப்பார்த்த காமாட்சியம்மாள்! "ஓ லட்சுமி பாட்டியா? வாங்க, பாட்டி வாங்க! என்று வர வேற்ருள். அடுத்து 'அடி தேனுகா, பாட்டிக்கு மணயை எடுத்துப் போடு” என்று குரல் கொடுத்தவள். உடனே தன் தவறையுணர்ந்து கொண்டு, 'என் ஞாபகத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/24&oldid=1338440" இலிருந்து மீள்விக்கப்பட்டது