பக்கம்:தரங்கிணி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

24

பாருங்க பாட்டி சின்னவள் பள்ளிக்குப் போயிருப்பதை மறந்துவிட்டு’ எனச் சொல்லியவாறே, தானே ஒரு மணையை எடுத்துப் போட்டாள். "இரண்டு நிமிடம் இப்படியே உட்காருங்க; பாட்டி! இதோ வந்து விடுகி றேன்.' என்று கூறிவிட்டு, அவள் அடுக்களைக்குள் மறுபடி யும் போகலாஞள்.

லட்சுமி பாட்டி சுவரைப்பிடித்துக்கொண்டே மெல்ல மணையில் உட்கார்ந்தவாறு, : "அவசரமொன்றுமில்லை. உன் வேலையை முடித்துவிட்டுத்தான் வா என்றவள், 'வழக்கமாக இந்த நேரத்தில் ஒய்வாக இருப்பாயே என்று தான் நினைத்து வந்தேன், பேசலாமென்று.” -

இதற்குள் அடுக்களைக்குள் போய் எஞ்சியிருந்த வேலை யைக் கவனித்துக் கொண்டிருந்த காமாட்சியம்மாள், மெல்ல உள்ளிருந்தவாறே, 'எல்லோரும் பள்ளிக்கூடம் போயிருந்தால், சமையல் வேலை நீங்க சொன்ன மாதிரிக் காலையிலேயே முடிந்திருக்கும். அகத்துக்காரரும் போக வில்லை; மூத்தவளும் இன்று பள்ளிக்குச் செல்லவில்லை; அதனுல்தான் பெரிய பையனுக்கும் சின்னப் பிள்ளை களுக்கும் மட்டும் ஏதோ செய்துபோட்டு அனுப்பிவிட்டு, அவருக்கு இப்போது பத்திய உணவு தயாரிக்கிறேன். அவருக்கு ஒரு வாரமாக உடம்பு சரியில்லை: சீதபேதி. ஏதேதோ மருந்து உட்கொண்டும் நின்றபாடில்லை. அவர் கூடத்தில் படுத்திருக்கிருரே. பார்க்கவில்லையா பாட்டி?: என்ருள். - "உன் அக்த்துக்காரரா அது? யாரோ என்று நினைத் தேன்..." - -

சில விநாடிகளுக்குப்பின் நினைத்துக்கொண்டு, "அது சரி, தங்கம் ஏன் பள்ளிக்குப் போகவில்லை? எங்கே அவள்? அவள் பெயர் மட்டும் என் பொக்கை வாய்க்குச் சரியாகச் சொல்ல வரமாட்டேன் என்கிறது. காமு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/25&oldid=1338441" இலிருந்து மீள்விக்கப்பட்டது