பக்கம்:தரங்கிணி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

25。

"அவள் இன்று விடியற்காலையிலேயே வீட்டுக்கு விலக் காகி விட்டாள். அதனுல்தான்

"ஓ! காஷூவல் லீவு என்று சொல்லு. நாலு நாட் களுக்கு, நீ ஒருத்தியே எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும், இல்லையா?”

காமாட்சியம்மாள் பதில் குரல் கொடுக்கவில்லை. லட்சுமி பாட்டி குழிவிழுந்த கண்களால் வீட்டின் நாலா புறத்தையும் ஆராயலானள். எங்கிருந்தோ பறந்துவந்து கரையத் தொடங்கிய இரண்டொரு காகங்கள், குழாயடி யில் போட்டிருந்த பற்றுப் பாத்திரங்களைத் தத்தம் அலகு களால் குத்திக் கிளறி உருட்டிக் கொண்டிருந்தன. கதிரவன் உச்சிக்கு விரைந்து கொண்டிருப்பதைக் கூடத்து வரை படர்ந்திருந்த வெய்யில் காட்டியது. காமாட்சி யம்மாள் வாழையிலையால் மூடப்பட்டிருந்த ஒரு கிண்ணத் தையும் தட்டையும் எடுத்துக் கொண்டு, சமையலறையி லிருந்து வெளிப்பட்டுக் கூடத்துக்குப் போனள். ஆனால், சில நிமிடங்களிலேயே திரும்பிவிட்டாள்.

'நன்ருய் அயர்ந்து உறங்குகிருர். தூக்கத்தைக் கலைக்க வேண்டாம் என்று வந்துவிட்டேன். அவர் நன்ருகத் தூங்கி ஐந்தாறு நாளாகிவிட்டன. நடு இராத்திரியில்கூட, அடிக்கடி எழுந்து, புறக்கடைக்குப் போய்க் கொண்டிருந் தார்.' -

கொண்டு போனவைகளைச் சமையல் உள்ளுள் வைத் குக் கதவைச் சாத்திவிட்டு, அவள், பாட்டியின் எதிரில் வந்து உட்கார்ந்தாள்.

"தங்கத்துக்குப் போட்டுவிட்டு, நீயும் சாப்பிட்டு விட்டுவந்து உட்காரேன் காமு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/26&oldid=1338442" இலிருந்து மீள்விக்கப்பட்டது