பக்கம்:தரங்கிணி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

26

"உங்களை உட்கார வைத்துவிட்டா? என்ற காமாட்சி யம்மாள், நாங்கள் இதற்குள் சாப்பிட மாட்டோம். இன்னும் நேரமிருக்கு. அவர் சாப்பிட்டானவிட்டு...”

"என்னைப் பற்றி யோசிக்காதே. நான் சாப்பாட்டு வேலையை முடித்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன்...”

"அம்மா, கொஞ்சம் தண்ணிர் கொடுக்கிருயா? தாக மாயிருக்குது பைங்கிள்ளே மழலை மிழற்றுவதுபோல் இனிய ஒலி கேட்டது. காமாட்சியம்மாள், உடனே ஒரு குவளையில் தண்ணீர் முகந்து எடுத்துக்கொண்டு போனள். சாப்பிடு கிருயா, தரங்கிணி' - t

"இப்போது வேண்டாம்." மறுபடியும் காமாட்சியம்மாள் லட்சுமி பாட்டியிடம் வந்தமர்ந்தாள். பாட்டி அவளே ஒருகணம் ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "இப்படிக் கஷ்டப்படுகிறதற்கென்றே பிறந் திருக்கிருய் போலிருக்கு உன்னைப் பார்க்கும் போதெல் லாம், எனக்கு என்னவோ போலாய் விடுகிறது. இப்படி நீ படும் அவஸ்தையில், உன் அகத்துக்காரரின் உடம்புக்கு ஒன்று வந்துவிட்டதென்ருல்: ஆமாம்; அவருக்கு எப்படிச் சீதபேதி கண்டது?”

நோய் நொடியுண்டாவதற்குக் கூடக் காரணம் கண்டுபிடித்துச் சொல்லமுடியுமா பாட்டி ஆல்ை ஒன்று: அவருக்கு ஒரு நிமிஷம் ஒய்வு ஒழிச்சல் கிடையாது. வேளை சாப்பாடு வேளேக்கு இல்லை. காலை விடிந்து எழுந்தால் டியூஷன். - பள்ளிக்கூடம், ஸ்பெஷல் கிளாஸ் என்று திரிந் தால், உடம்புக்கு வராது என்ன செய்யும்?" -

'பிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்வது என்ன லேசான காரியமா? தொண்டைத் தண்ணிர்ைக் கொடுத்துக் கத்தித் தொலைக்கனுமே..அதுவே மூலச்சூட்டையெழுப்பியிருக் கும்...பால், மோர், நெய் முதலியவற்றைக் கொஞ்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/27&oldid=1338443" இலிருந்து மீள்விக்கப்பட்டது