பக்கம்:தரங்கிணி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

37

அதிகமாகச் சாப்பாட்டில் சேர்த்து வந்திருந்தால்...?”

என்று சொல்லி நிறுத்திவிட்டுக் காமாட்சியம்மாளின் முகத் தைப் பார்த்தாள் பாட்டி. >

காமாட்சியம்மாளின் வதனத்தில் துயர மேகம் கவிழ்ந்தது. "ஒருத்தர் சம்பாதித்து ஒன்பதுபேர் சாப்பிட ணும். பிள்ளை குட்டி பெற்றவருக்கு, தாம் மட்டும் பால் மோர், பழங்களைச் சாப்பிட்டுப் போஷாவுக்குத் தேடிக் கொள்ள மனம்தான் வருமா பாட்டி?”

  • நீ சொல்வதென்னவோ வாஸ்தவந்தான். ஒவ் வொருத்தர் இருக்கிருர்கள், பிள்ளைகளாச்சு, பெற்றவர் களாச்சு, நம்வரை பார்த்துக்கொண்டு போவதை விட்டு' என்று. உன் அகத்துக்காரர் அவ்விதமெல்லாம் எண்ணக் கூடிய கல்நெஞ்சுக்காரரல்லவே. உம்! எல்லாவற்றுக்கும் ஆண்டவன் இருக்கிருன். அவன் கைவிட மாட்டான்."

கடைசியில், பாட்டி வேதாந்தம் பேசிள்ை. குத்துக்கால் இட்டு உட்கார்ந்திருந்த காமாட்சி, தன் பெருவிரலால் தரையை நிமிண்டியவாறே, ஏதோ யோசனை யில் ஆழ்ந்திருந்தாள்.

சில விநாடிகள் இருவரிடையிலும் மெளனம் நிலவி யது. இடையிடையே காகம் கரைவது ஒன்றைத் தவிர, வேருென்றும் அவ்விடத்தில் நிலவியிருந்த அமைதியைக் கலைக்கவில்லை. "கா, க்ா, கா என்று காட்டுக் கூச்சலிட்டுப் பறந்ே தாடும் காக்கைக் கூட்டத்தினிடையிலும், ஒரிரு காகங்கள் துணிகளை உலர்த்தும் கம்பிகள்மீது சாவதான மாக அமர்ந்து, கழுத்தைச் சாய்த்து, கா, ஹ் ஹ் ஹ் ஹ்" என்று அளபெடையிட்டுக் கரைந்து, இனிய ஓசையைப் பரப்பிக் கொண்டிருந்தன. இந்த ஒசையின் ஊடே இனிய இசையொலி மெல்ல இழைந்து கொண்டிருந்தது. லட்சுமி பாட்டியின் பாம்புச்செவிகளில் இது எப்படியோ விழுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/28&oldid=1338444" இலிருந்து மீள்விக்கப்பட்டது