பக்கம்:தரங்கிணி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

28

விடவே, அவள் கூர்ந்து கேட்கலானள். ஏழிசையோடு இனிய பாடல் ஒன்று அவள் காதில் வந்து ரீங்கார மிடலாயிற்று.

"மென்னடை யன்னம் பரந்து விளையாடும் வில்லிப்புத்துர் உறைவான் தன் பொன்னடி காண்பதோர் ஆசையில்ை என் பொருகயற கண்ணிணை துஞ்சா இன்னடி சிலொடு பாலமு (து)ஊட்டி

எடுத்தஎன் கோலக் கிளியை உன்னெடு தோழமை கொள்வன் குயிலே! உலகளந் தான்வரக் கூவாய்." 'ஆஹா! ஆ! கர்ணுமிர்தமான கானம்! பாசுரமும் அருமையான பாசுரம். நம்ம தங்கமா பாடுகிருள்?" இன்னிசை மிதந்துவந்த திசையை நோக்கியவாறே, பாட்டி பரவசத்தோடு கேட்டாள். அதற்குப் பதில் எதுவும் கிடைக்காது போகவே, காமாட்சியம்மாள் பக்கந் திரும் பிப் பார்த்தாள். அவள் கண்களில் நீர் சுரந்திருந்ததைக் கண்டு, பாட்டி பதறிப் போளுள்.

காமாட்சி, ஏன் கலங்குகிருய்?" காமாட்சியம்மாள் பதட்டத்துடன் கண்ணிரை முந்தானையால் துடைத்துக்கொண்டு, 'ஒன்றுமில்லை பாட்டி' என்ருள்.

"காமாட்சி, நீ மகா பாக்கியசாலி மெத்தப் படித்த மனிதனொருவருக்கு வாழ்க்கைப் பட்டிருக்கிருய்; மிகவும் புத்திசாலிப் பிள்ளைகளைப் பெற்றிருக்கிருய்; பெண்ணுய்ப் பிறந்த ஒருத்திக்கு இதைவிட வேறென்ன வேண்டும்? என்ன குறை உனக்கு? சொல்லு.'

காமாட்சியம்மாளின் மனநிலையைப் புரிந்துகொண் டவுள் போலப் பாட்டி அவளுக்கு ஆறுதல் சொன்னள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/29&oldid=1338445" இலிருந்து மீள்விக்கப்பட்டது