பக்கம்:தரங்கிணி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

29

காமாட்சியம்மாள் ஒன்றும் பேசவில்லை.

பாட்டி, தரங்கிணி இருந்த பக்கம் மீண்டும் கவனிக்க லாளுள். அவள் முன் கேட்ட பாடலே, இராகாலாபனை யுடன் பன்னிப்பன்னிப் பாடப்படுவதை உணர்ந்த அவள், காமாட்சியம்மாள் பக்கந் திரும்பி, "காமாட்சி சாயங் காலம் தங்கத்துக்குத் திருஷ்டி கழிய ஏதாயினுஞ் சுற்றிப் போடு. என் பாழுங் கண்ணே பட்டாலும் படும். என்று சொன்னாள். நானும் என் ஆயுசில் எத்தனையோ பேர் பாடிக் கேட்டிருக்கிறேன். ஆனல், தங்கம் பாடிய பாணி யைப் போல், அவளுடைய குரல் இனிமையைப் போல், நான் கேட்டதில்லை யென்றே சொல்லவேண்டும் ஆஹா! அவள் பாடும்போது குயில் கொஞ்சுவது போலல்லலா இருக்கு அவள் பூர்வஜன்மத்தில் பழநியாண்டவனுக்குத் தேளுபிஷேமாக நிரம்பச் செய்திருக்க வேண்டும். அந்தத் தெவிட்டாத தித்திப்பை, இவள் தொண்டையில் அப்படியே வைத்து விட்டிருக்கிருன் சிவகுமாரன். இவளிட முள்ள சாரீர சம்பத்தை வேறு யாருங் கடன் வாங்க் முடி யாது."

"போங்க, பாட்டி குழந்தை என்னவோ பாடினல், அதைப் போய் இவ்வளவு பிரமாதப்படுத்திப் பேசுகிறீர் &6t.”

காமாட்சியம்மாள் குறுக்கிட்டுப் பேசிளுள்.

'காமாட்சி, நீ அடக்கமாகப் பேசுவதைக் குற்றஞ் சொல்லவில்லை. ஆனால், நான் இப்போது சொன்னது அத்தனையும் உண்மையாக்கும். என்னுடைய அபிப்பிரா யத்தை, அக்கம்பக்கத்துப் பெண்கள் பேசுவதைப்போல் சாதாரணமாக மதித்துவிடாதே. எனக்கும் சங்கீத ஞானம் கொஞ்சம் உண்டு. எங்கள் குடும்பம் சங்கீத வாசனையுள்ள குடும்பம். தாய்வழியில் இரண்டொருவர் சங்கீத வித்வான்களாகவும் இருந்திருக்கிருர்கள், ஆமாம்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/30&oldid=1338446" இலிருந்து மீள்விக்கப்பட்டது