பக்கம்:தரங்கிணி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

30

பாட்டி நீட்டி முழக்கினுள். காமாட்சியம்மாள் நாணப் புன்னகை செய்தவாறு, "உங்க அபிப்பிராயத்தை நான் லேசாக மதிக்கவில்லை பாட்டி தரங்கிணி சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போதும் சும்மா இருக்க மாட்டாள். ஏதாயினும் வாய்க்கு வந்ததைப் பாடிக்கொண்டிருப்பாள். அதுபோல்தான் இன்றும்...'

'இதுதான் சாதகம் என்பது. எல்லாராலும் முடி யாதே... என்று சொன்ன லட்சுமி பாட்டி, "ஏதோ பாட்டுப் போட்டியில் தங்கம் தங்கப் பதக்கம் வாங்கியிருக் கிருள் என்று எங்க பக்கத்து வீட்டுப் பார்வதியின் மகள் சொன்னுள். அதைப்பற்றி உன்னைக் கேட்டு விவரம் தெரிந்து கொள்ளத்தான் முக்கியமாக இன்றைக்கு வந்தேன். பேச்சுப் போக்கில் வந்த விஷயமே எனக்கு மறந்து போய்விட்டது. இதுவரை தங்கம் பாடி நான் கேட்டதில்லை. அதனால்தான், இவள் போட்டியில் கலந்து கொண்டு பாடி முதற்பரிசு பெற்றிருக்கிருள் என்ற சமா சாரத்தைக் கேட்டதும், நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். என் பாராட்டைத் தெரிவிக்கவும் வந்தேன். ஆனல், இன்று எதிர்பாராத நிலையில் அவள் பாடியதைக் கேட்ட பின்னர்தான், முதற் பரிசு வாங்கியது இவள் மேதைக்குப் பிரமாதம் ஒன்றுமில்லை; என்னைப்போன்ற கிழடுகளின் ஆசி மொழிகளுக்கும் அவசியமில்லை; எல்லாவற்றையும் விட பரம்பொருளின் கருணை பரிபூரணமாக இவளுக்கு இருக்கு என்று தெரிந்தது..."

சில நிமிடங்கள் வாய் ஒய்ந்திருந்த பாட்டி, மறுபடியும் ஏதோ நினைத்துக் கொண்டு, "சும்மா இருக்காமல் ஏதாயினும் வாய்க்கு வந்ததைப் பாடிக் கொண்டிருப்பாள் என்றல்லவா சிறிது முன் சொன்னாய்? நீ குறிப்பிட்டது போல் அவள் வாய்க்கு வந்ததை யெல்லாமா பாடுகிருள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/31&oldid=1338447" இலிருந்து மீள்விக்கப்பட்டது