பக்கம்:தரங்கிணி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

32

லாம்கூட, தரங்கிணி அருமையாகப் பாடுவாள். ஏன்? நீங்ககூட நன்ருகப் பாடுகிறீர்களே பாட்டி, இந்த வயதில்...?”

காமாட்சியமமாள் சொல்லி நிறுத்தினுள். 'உன்மகள் அருமையாகப் பாடுவதைக் கேட்கவா வேண்டும். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பருக்கை பதம்’ என்பார்கள். அது போல், சற்று முன்னே கேட்ட ஒரு பாட்டுப் போதுமே. அவளுடைய சங்கீத விற்பன்னத்தைத் தெரிந்து கொள்ள, அவள் பொய்க்குரலில் கீழ் ஸ்தாயியில் பாடும்போதே இவ்வளவு தேவாமிர்தமாயிருக்கிறதே! இன்னும் அவள் வாய்விட்டுக் குரல் எடுத்துப் பாடினல், எவ்வளவு நன்ருய் இருக்கும்...!" .

"அவள் தீட்டாயில்லாதிருந்தால், உங்கள் முன்னே வந்து உட்கார்ந்து, நீங்கள் விரும்பும் பாடலைப் பாடச் சொல்லியிருப்பேன், பாட்டி.' -

அதற்கென்ன! அப்புறம் கேட்காமலா போகிறேன்? அது சரி; தங்கத்துக்கு யார் சங்கீத சிட்சை செய்து வைக் கிருர்கள்?

'இவளுக்கு சங்கீத சிட்சை செய்து வைப்பதற்கு நாங்கள் காசுக்கு எங்கே போவோம்? அதெல்லாம் ஒன்று மில்லை. இவளுடைய அப்பா, தமக்குத் தெரிந்த ராகம், பாட்டையெல்லாம் சொல்லி வைத்திருக்கிரு.ர். இது வல்லாமல், எங்கெங்கே பிரபல வித்வான்களின் கச்சேரி நடந்தாலும், இவளே அழ்ைத்துக் கொண்டு போவார். போதும் போதாதென்று ரேடியோ இருக்கவே இருக்கு. இது அல்லாமல், இவளுக்குக் குரல் இனிமையாயிருக்கிற தென்று பள்ளிக்கூடத்தில் பாட்டுச் சொல்லித் தருகிருர் கள். பாட்டு, நாடகங்களில் சேர்த்துவிடுகிரு.ர்கள். இப்படி யாக, பெரும்பாலும் கேள்வி ஞானம்தான்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/33&oldid=1338449" இலிருந்து மீள்விக்கப்பட்டது