பக்கம்:தரங்கிணி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

33

"அப்படியா? சந்தர்ப்பமும் செளகரியமும் வாய்த்து. இவளுக்கு முறையாகச் சஞ்சீதஞ் சொல்லிக் கொடுத்தால், பெரிய பாடகியாக விளங்குவாள்' என்று, தன் அபிப் பிராயத்தை வெளியிட்ட பாட்டி, "கடவுளுக்கு இது என்ன விளையாட்டோ தெரியவில்லை? புத்திசாலிகளுக்குப் பணவசதி தருவதில்லை; பணமுடையவர்களிடம் அறிவைச் சூனியமாக்கி விடுகிருன்.' r

"ஆண்டவனைச் சொல்விப் புண்ணியமில்லை. பாட்டி! அவரவர் செய்த கர்மானுசாரப்படிதான் எல்லாம் அமைவதாகவும் நடப்பதாகவும் உங்களைப்போல் உலகானுபவமுள்ள பெரியவர்கள் சொல்லிவருகிருர்களே! உங்களுக்குத் தெரியாதா?”

மீண்டும் இவர்களிடையே அமைதி நிலவலாயிற்று. நடுத்தர வயதான காமாட்சியம்மாளின் அகன்றநெற்றியில் ஏற்பட்ட சுருக்கங்கள், அவள் மறுபடியும் சிந்தனையில் ஆழ்ந்திருக்கிருள் என்பதை அறிவித்தன. அப் பேரமைதி யில், சில்வண்டுகள் மூங்கிலைத் தொளைசெய்கையில் கிர் என்று இனிமையாக ரீங்காரம் செய்தவாறு சுற்றிச்சுற்றிப் பறப்பதுபோல, இன்னிசை மெல்ல இழைந்து கொண் டிருந்தது கேட்டது. ஆவல் உணர்ச்சியால் உந்தப்பட்ட வளாக, லட்சுமி பாட்டி, பொக்கை வாயில் போட்டுக் குதிப்பிக் கொண்டிருந்த தாம்பூலத்தை உமிழும் சாக்கில் எழுந்து போய், தரங்கிணி இருக்கும் நிலையை கண்ணுேட்ட மிடலானள். பாட்டி பார்த்த சமயத்தில், தரங்கிணி தன் வயமிழந்த நிலையில் இருந்தாள்: தியான நிலையில் இருப்பது போல் அவள் கண்ணிமைகள் முடியிருந்தன. செம்பவள வாய் மட்டும் மெல்ல அசைந்து கொண்டிருந் தது. மட்டிப்பால் ஊதுவத்தியிலிருந்து நறுமணப் புகை கிளம்பி, இழை இழையாக வளையமிட்டுப் பரவுவதுபோல, அவள் தனக்குள்ளாகவே பாடித் தானகவே அனுபவித்துக்

த.-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/34&oldid=1338450" இலிருந்து மீள்விக்கப்பட்டது