பக்கம்:தரங்கிணி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

34

கொண்டிருந்த இனிய கீதம், ராக விந்நியாசத்துடன் மெல்ல வெளியாய்க் கொண்டிருந்தது. அவளது மலர்க் கரமொன்று, தொடையில் தாளம் போட்டுக் கொண்டிருந்

தது.

லட்சுமி பாட்டிக்கு ஆவல் அதிகமாய் விட்டது. தரங்கிணி இப்போது என்ன பாடலே எந்த இராக தாளத் துடன் பாடுகிருள் என அறியும் ஆசையுடன், குழாயடியி விருந்த அண்டாவிலிருந்து செம்பில் தண்ணிரை மொண்டு வாயைக் கொப்பளித்துச் சாக்கடையில் உமிழ்வதுபோல் பாவனை செய்து, அங்கு தாமதித்து நின்று, செவியைச் சாய்த்துக் கேட்கலாஞள்.

பெரியவனே மாயவனைப் பேருலக மெல்லாம் விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனைக் காணுத கண் என்ன கண்ணே! கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்என்ன கண்ணே! இளங்கோ அடிகள் சிலப்பதிகாரக் காவியத்தில் பாடி யுள்ள அற்புதமான பாடலொன்று, பூரீ ரஞ்சனி ராகத்தை வாகனமாகக் கொண்டு, அவ்விடத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்தது *

தரங்கிணி ஆத்மானுபவத்துடன் அனுபவித்துப் பாடிய இவ்வினிய பாடலைக் கேட்டு, லட்சுமி பாட்டி பக்திப் பரவசத்தால் மெய்ம்மறந்து நின்று விட்டாள். அவள் தன்னுணர்வு பெற்றபோது,

படர்ந்து ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானே ஏத்தாத கா என்ன காவே! - நாராயணு என்ன கா என்ன காவே! என்ற பாடல் அடிகள், பியாகடை ராகத்தில் ஒலித்துக் கொண்டிருப்பதைக் கேட்டாள். -

இப் பாடல் பாடி முடிந்ததும், தரங்கிணி நா, 'நாராயணு, நாராயணு, நாராயணு" என்ற திருமாலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/35&oldid=1338451" இலிருந்து மீள்விக்கப்பட்டது