பக்கம்:தரங்கிணி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

35

திவ்விய திருநாமத்தை நாதப்பிரம்மத்தில் நிலைநிறுத்த முயல்வதுபோல், தொடர்ந்து துதி பாடிக் கொண்டே யிருந்தது. பாட்டியும், தன்னையறியாமல் நாராயணு என்று உச்சரிக்கத் தொடங்கி விட்டாள். வயது முதிர்ச்சியால் தளர்ந்த அவள் உடம்பு, பக்திப் பரவசத்தால் தடுமாற லாயிற்று. உடனே அவள், அருகிலிருந்த சுவர்ப்பிடியைப் பிடித்துத் தன்னைச் சமாளித்துக்கொள்ள முயன்ருள்.

காமாட்சியம்மாள் எழுந்து ஓடிவந்து பாட்டியைப் பிடித்துக் கொண்டாள். 'என்ன பாட்டி, மயக்கமாயிருக் கிறதா?” என்று கேட்டவாறு, கையைப் பிடித்து அழைத்துப் போனுள். 'எச்சிலேத் துப்பப் போனவங்க ரொம்ப நாழியா நிற்கிறீங்களே என்று நினைச்சேன். நான் சந்தேகப்பட்டது சரியாப் போச்சு. மற்றவங்களைப் போல் நீங்க புகையிலைகூடப் போடுவதில்லையே, மயக்க மாவதற்கு? ஒருவேளை பாக்கில் ஏதாயினும் பூச்சி கீச்சி இருந்ததோ?” • r

பழையபடி உட்கார்ந்த லட்சுமி பாட்டி தனக்குள் சிரித்துக் கொண்டாள். "நான் போட்டிருந்த வெற்றிலை பாக்கு மயக்கமுண்டாக்க வில்லையடி) உன் மகளின் பாட்டுத்தான் என் தலையைச் சுற்றச் செய்தது' என்று சொல்ல நினைத்தாள். ஆனல், தன் அனுபவ நிலையை விவரிக்க மனமில்லாமல், பேசாமல் இருந்துவிட்டாள்.

'பாட்டி, எப்போ வந்தாங்க? அவங்களுக்கு மயக்கமா வந்தது'

-- இக் குரலேக் கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தனர். தரங்கிணி, அவள் இருந்த அறைக் கதவுக்கு வெளியே வந்து நின்று கொண்டிருந்தாள். காமாட்சியின் படபடத்த பேச்சு இவளுடைய கான நிலையைக் கலைத்து விட்டது போலும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/36&oldid=1338452" இலிருந்து மீள்விக்கப்பட்டது