பக்கம்:தரங்கிணி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

36

"நான் வந்து ரொம்ப நாழியாச்சு, தங்கம். நீ ஏதோ சிந்தனையோடு பாடிக் கொண்டிருந்தாய் அதைக் கலைக்க வேண்டாமென்று வந்துவிட்டேன்.”

"நீ சாப்பிடுகிருயா, தரங்கம்?" காமாட்சியம்மாள் மகளைக் கேட்டாள், "அப்பாவுக்கு ஏதாவது கொடுத்தாயா அம்மா?” அவள், தந்தை படுத்திருக்கும் இடத்தை எட்டிப் பார்த்தவாறே, வினவினுள்.

'இல்லை. அவர் அலுத்துத் துரங்கிக் கொண்டிருக் கிருர்; அதைக் கலைக்கவேண்டாமென்று இருக்கிறேன்.”

இவ்விதம் பதில் சொல்லியவாறே, காமாட்சியம்மாள் கூடத்துப் பக்கம் போளுள். அப்போதும் பரமசிவம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

"அவரை எழுப்பாதே, அம்மா இராத்திரியெல்லாம் தூக்கமில்லாமல் அடிக்கடி எழுந்து போய்க் கொண்டிருந் தார்...'

தரங்கிணியின் குரலில் இரக்கமும் பரிவும் தொனித் தன. *

லட்சுமி பாட்டி, அவளுடைய அழகிய முகத்தையும் வாயசைவையுமே பார்த்துக் கொண்டிருந்தாள். இது கண்டு நாணங் கொண்டோ என்னவோ, தரங்கிணி, பழையபடி உள்ளே போய் உட்கார்ந்துவிட்டாள்.

கூடத்திலிருந்து சமையற்கட்டுக்குப் போய்ப் பார்த்துவிட்டுத் திரும்பிவந்த காமாட்சியம்மாள், "மோர் கொஞ்சங் கொண்டு வரட்டுமா, பாட்டி? என்று கேட்டாள்.

"எனக்கு ஒன்றும் வேண்டாம். நீ சும்மா வந்து உட்காரு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/37&oldid=1338453" இலிருந்து மீள்விக்கப்பட்டது