பக்கம்:தரங்கிணி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

37

காமாட்சியம்மாள், முன்போல் பாட்டியின் எதிரில் குந்தினுள்.

பாட்டி, காமாட்சியம்மாளைச் சிறிது நேரம் பார்த்து விட்டு, “காமாட்சி, தங்கத்தைக் கட்டிக் கொள்ளப் போகிறவன் அதிர்ஷ்டசாலியாயிருப்பான். நான் சொல்லு கிறேன், வேண்டுமானல் பார். உன் மகள் ஒரு பெரிய குபேரன் வீட்டில்தான் வாழ்க்கைப் படுவாள்.' என்று, பல்லுப்போன வாய் முற்றுந் தெரியக் கூறினள்.

காமாட்சியம்மாள் இதுகேட்டு மகிழ்ந்து போக வில்லை. அதற்குப் பதிலாக வருத்தந் தோய்ந்த குரலில், 'நீங்க ஒண்னு பாட்டி! எங்க ஏழ்மை நிலைக்கு எந்தக் குபேரன் மகன் தரங்கத்தைக் கலியாணஞ் செய்து கொள்ள வருவான்? இருக்கிறது குட்டிச் சுவரு; களுக் காண்கிறது மச்சு மாளிகை’ என்பாங்க. அதுபோல இருக்கு உங்க பேச்சு” என்ருள். -

போடி பைத்தியக்காரி; உன் பெண்ணின் பெருமை உனக்குத் தெரியவில்லை. அவள் இருக்கிற அழகுக்கும் அறிவுக்கும், எத்தனை பேர் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வரப்போகிருர்கள் பார்! அவள் வாய் திறந்து ஒரு பாட்டுப் பாடினல் போதுமே! மன்னதி மன்னனும் அவள் காலடியில் வந்து மண்டியிட்டு விழுவானே!...” என்ற பாட்டி, சிறிது நிறுத்தி, மறுபடி யும், 'தங்கம் கலியாணஞ் செய்து கொள்கிறபோது, நான் உயிரோடு இருக்கிறேனே இல்லையோ. ஆனாலும், அவளுக்கு சகல லட்சணமும் பொருந்திய ஒரு நல்ல வரன் வாய்த்து, ராஜாத்திபோல் சகல செளபாக்கியங்களு டனும் அவள் நல்வாழ்வு வாழுஞ் சமயத்தில், நீ நினத்துக் கொள்ளப் போகிருய், லட்சுமி பாட்டி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மைதான் என்று."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/38&oldid=1338454" இலிருந்து மீள்விக்கப்பட்டது