பக்கம்:தரங்கிணி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

38

காமாட்சி மெல்ல நகைத்துக் கொண்டாள் "என்னமோ, நீங்க நான் சந்தோஷப்படட்டும் என்று ஏதோ சொல்லுகிறீர்கள்? அதற்காக நன்றி செலுத்து கிறேன். ஆனல், எங்கள் நிலையை நாங்கள் அறிந்துதானே எதையும் நினைக்கவேண்டும்; நடக்க வேண்டும். நீங்கள் இதைச் சொல்லுங்கள், விரலுக்குத் தகுந்தபடி தானே விக்கம் ஏற்படும்?"

"காமாட்சி, என்ன அப்படிச் சொல்லிவிட்டாய்? உன்னை மகிழ வைப்பதற்காகவா இப்படிச் சொல்லுகி றேன் என்று நினைத்து விட்டாய்? நான் உன்னிடம் அப்படி முகமன் கூறவேண்டிய அவசியமென்ன இருக்கு?

லட்சுமி பாட்டி பேசிக்கொண்டே போனவள், சிறிது நிறுத்தி, பின் வியப்போடு கேட்டாள்; "சொர்ண விக்கிரகம் போன்ற பெண்களைப் பெற்றிருந்தும், நீ ஏன் இப்படிப் பயப்படுகிருய் என்று எனக்கு விளங்கவில்லை?ன

"நான் பெண்ணுய்ப் பிறந்து புத்தி தெரிந்ததிலிருந்து, பெண்களைப் பெற்றுவிட்டவர்கள் பட்டுவரும் கஷ்டங் களேயெல்லாம் பார்த்து வருவ தால்தான், இவ்வளவு ஆாம் பயப்பட வேண்டியிருக்கு. பெருஞ் செல்வமும் செல்வாக்கும் உடையவர்களே, தங்கள் பெண்களுக்கு நல்ல வரன்களைத் தேடிப்பிடித்துக் கலியாணஞ் செய்து முடிக்க முடியாமல் திண்டாடுவதைக் காணும்போது, ஏழை வாத்தியாருக்கு வாழ்க்கைப்பட்ட என் வயிற்றில் பிறந்த பெண்களுக்கு, தக்க வரனைக் கண்டுபிடித்துக் கலியாணம் முடிக்க எவ்வளவு கஷ்டப்படவேண்டியிருக் குமோ என்று நினைத்துப் பயப்படாமல் இருக்க முடியுமா?”

இப்படிச் சொல்லும்போது, காமாட்சியின் உடம்பு ஒரு குலுங்கி குலுங்கி அடங்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/39&oldid=1338455" இலிருந்து மீள்விக்கப்பட்டது