பக்கம்:தரங்கிணி.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

உலக மகாகவிகளின் வரிசையில், சிகரமாக வைத்து எண்ணத்தக்க பெருங்கவிஞர்களை இப் பூவுலகுக்கு ஈந்து, உயர் புகழ் பெற்றது நம் பாரத தேசம் என்பது உலகப் பிரசித்தம். பவபூதியும் காளிதாஸனும், உஜ்ஜயினி மன்னன் விக்கிர மாதித்தன் அரசவையை அலங்கரித்து வந்த மகாகவிஞர்கள் என்பது அறிஞர்களுக்குத் தெரியும். காளிதாஸன் சாகுந்தலம், குமாரசம்பவம் போன்ற காவியங்களை இயற்றி, காவியத் துக்குக் காளிதாஸன்” என்ற பெரும் புகழைப் பெற்று விட்டார். உத்தர ராம சரிதம்’ என்ற ஒப்பற்ற காவியத்தைப் பாடிக் கல்லையும் மண்ணையுங்கூடக் கனிந்துருகச் செய்திருக்கும் பவபூதி, காளிதாஸன் அளவு புகழடைய முடியவில்லை. இதற்குக் காரணம், அவரவர்களுக்கு ஏற்பட்டிருந்த வாய்ப்பும் வாழ்க்கை வசதியும்தான். இந்நிலையை, எல்லா மொழிக் கவிஞர்களிடையிலும், தொன்றுதொட்டு நாம் பார்த்து வருகிருேம்.

சென்ற முப்பதாண்டுகளுக்கு மேலாக நான் புரிந்து வரும் இலக்கியப் பணிக்கு, நியாயமாகக் கிடைக்கக்கூடிய புகழும் பொருளும் கிடைக்கவில்லையே, தமிழகம் போற்றிப் பேண்வில்லையே என்று கூறி, நண்பர் பலர் வருத்தப்படுவர். அவர்களுக்கு, நா ன், பவபூதி போன்ற கவிஞர்களின்

வாழ்க்கை நிலையைச் சுட்டிக்காட்டி, ஆறுதலடையச் செய்வது வழக்கம்.

தமிழ் நாட்டின் இருண்ட காலம் என்று ஒன்று உண்டு என்பதை, தமிழ்நாட்டு வரலாற்றைப் படித்தவர்கள் அறிவர். தமிழ் வேந்தர்கள்_ஆட்சி வீழ்ச்சியுற்று, களப்பிரர்கள் என்ற கொள்ளைக் கூட்டமொன்று தலைவிரித்தாடிய காலந்தான் ئي{ئيifد அதுபோல, என் வாழ்க்கையில் இருண்டகாலம் என 19491960 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பன்னிரண்டாண்டு களைச் சொல்லலாம். அக்காலத்தில், நிரப்பு என்னும் நெருப் பில் துயின்று துடிதுடித்துக் கொண்டிருந்தேன். வாழ்க்கைச் சோதனை மேலெழுந்திருந்த இக்காலத்தில், நான் ஏதேனும் சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம் என ஏழுதியிருந்தேன ல்ை, அது நிர்ப்பந்தங்காரணமாக இருக்குமேயெர்ழிப், இயற் கையின் உந்துதலால், உள்ளத்தின் எழுச்சியால் உருவான்வை யல்ல என்று அறியவேண்டும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/4&oldid=575194" இலிருந்து மீள்விக்கப்பட்டது