பக்கம்:தரங்கிணி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

39

லட்சுமி பாட்டியின் பொக்கைவாய், சிரிப்பால் அகின்றது.

"உன் காலத்தையும் என் காலத்தையும் நினைத்துக் கொண்டு பேசுகிருய் காமாட்சி. இப்போது காலம் போகிற வேகமான போக்கை உணர்ந்து பார்த்திருந்தாயா ஞல், நீ இவ்விதம் பயப்படவும் மாட்டாய்; அங்கலாய்க்க வும் மாட்டாய்."

"என்ன காலம் மாறிப்போச்சு என்கிறீர்கள், பாட்டி? எனக்குத் தைரியமில்லை.”

"ஏன் மாறவில்லை? நம்ம காலத்தில் பெண்கள் வயது வருவதற்கு முன்பே வதுவை செய்து கொடுத்துவிட வேண்டும். 16 வயதுக்கு மேல்தான் பெண்களுக்குக் கலியாணஞ் செய்ய வேண்டுமென்று சட்டஞ் செய்யப் பட்டதுமே, வரதட்சிணை நிர்ப்பந்தம் எவ்வளவோ குறைந்து விட்டது.”

'நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள், பாட்டி! நடை முறையை நன்கு கவனிக்கவில்லை என்றே உங்கள் பேச்சி லிருந்து தெரிகிறது. பாலிய விவாகத் தடைச்சட்டம், வரதட்சணைத் தடைச்சட்டம் முதலியன வந்திருப்பதால், பணக்காரர்களுக்கு வேண்டுமானல் அனுகூலமான நிலை உண்டாயிருப்பதாகச் சொல்லாம். எங்களைப் போன்ற ஏழைக் குடும்பங்களுக்கு எவ்விதமான செளகரியங்களும் இவற்ருல் ஏற்படவில்லை. இந்த உண்மை உங்களுக்கு எப்படித் தெரியாமல் போய்விட்டது?" -

காமாட்சியம்மாள் திடீரென ஏதோ நினைத்துக்

கொண்டவளாக, 'உங்களுக்கு இதைப்பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதற்கோ, சாதகபாதகங்களைத் தெரிந்து கொள்ளு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/40&oldid=1338456" இலிருந்து மீள்விக்கப்பட்டது