பக்கம்:தரங்கிணி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

40

வதற்கோ அவசியமில்லை. உங்களுடைய பூர்வஜன்ம சுகிர்தம் உங்களுக்குப் பெண் பிரஜைகள் இல்லை. உங்களு டைய ஒரே குமாரருக்கும் பெண் பிள்ளைகளே இதுவரை பிறக்கவில்லை. அதல்ை...'

பாட்டி குறுக்கிட்டாள்: அதனல் எனக்கு நிலைமை புரியாது என்கிருய்? அதுதானே! நீ சொல்லுகிறபடியே பெண்களுக்கு வரன்தேடுகிற பிரச்னை பொதுவில் கஷ்ட மாக இருந்தாலும், உன் பெண்கள் விஷயத்தில் அவ்விதக் கஷ்டம் இருக்காது என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்ருல், உனக்குப் பிறந்திருக்கிறதுபோல, ராஜ குடும் பத்தில் கூட இவ்வளவு லட்சணமான பிள்ளைகளைப் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட அழகுவாய்ந்த பெண்களைப் பெற்றுவிட்டு, நீ என்னமோ கவலைப்பட்டுக் கொண்டிருக் கிருய்?"

"நீங்கள் சொல்லுவதுபோல, அழகும் அறிவும் வாய்ந்த பெண்களைப் பெற்றிருப்பதால்தான், இவர்களுக் குத் தகுந்தபடியான வரன்களைத் தேடிப் பிடிக்க வேண்டுமே என்ற கவலை அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கவலையைத் தரங்கிணி இவ்வளவு சீக்கிரமாக ஏற் படுத்துவாள் என்று நாங்கள் நினைக்கவில்லை. இவளுக்கு இன்னும் பதின்மூன்று வயதுகூடப் பூர்த்தியாகவில்லை. அதற்குள் இவள் பருவம் அடைந்து விட்டாள்.'

"சீக்கிரம் வயது வந்ததற்காகச் சஞ்சலப்பட வேண்டியதில்லை. பத்மினி சாதிப் பெண்களாக இருப் பவர்கள், பன்னிரண்டாம் வயதிலேயே பருவம் எய்தி விடுவார்களாம். தங்கம், சகல விஷயத்திலும் உத்தம் மான-பெண். அவள் சகல செளபாக்கியங்களுடனும் ஷேமமாக வாழ்வாள்." - * . . . .

'தரங்கிணி நாலாவது பாரத்துக்குப் பிரமோஷன்

. ஆளுள். அடுத்த மாதமே பெரியமனுஷி யாய்விட்டாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/41&oldid=1338457" இலிருந்து மீள்விக்கப்பட்டது