பக்கம்:தரங்கிணி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

41

ஆனல், இந்தச் சமாசாரத்தை எங்கள் சொந்தக்காரர் களுக்குக்கூடத் தெரியப்படுத்தவில்லை. எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்துபோகும் உங்களைப்போல இரண்டொருத் தருக்குத்தான் தெரியும்...'

"நான் இதை யாருக்குஞ் சொல்லமாட்டேன்; பயப் படாதே' என்று சிரித்துக் கொண்டே சொன்ன பாட்டி, "தங்கத்துக்குப் பதிமூணு வயதுதான ஆகிறது? குறைந்: தது பதினறு வயதாயினும் இருக்கும் என்று எண்ணியிருந் தேன். வயதுக்குமீறிய வளர்ச்சிதான், அவள் அறிவைப் போல...'

"நாங்கள் என்ன, இருக்கிறவர்கள் வீட்டுப் பிள்ளை களுக்குத் தருவதுபோலப் பாலும் நெய்யும், மோருமாகவா இதுகளுக்கு ஊட்டி வளர்க்கிருேம்? பருப்பில்லாத சோறும் கீரைக்கறியும் வேளாவேளேக்குச் சரியாகக் கிடைப்பதே துர்லபம். இந்த லட்சணத்தில் இதுகள் ஆறுமாதத்துப் பயிர்போலக் கருகருவென வளர்ந்து வருகின்றன. அடுத்த பெண் கல்யாணிக்கு, வருகிற ஐப்பசியில் பதினேராவது வயது தொடங்குகிறது. அவள் இப்போதே உயரத்திலும் பருமனிலும் தரங்கத்தை மீறிவிடுவாள் போலிருக்கிறது. பையன் என்னடா என்ருல் நோஞ்சானுயிருக்கின்ருன். அவன் தரங்கத்தைவிடப் பெரியவன் என்ருல், யாரும் நம்பமாட்டேன் என்கிருர்கள்...”

"மணி தகப்பனைப் போலிருக்கிருன்; அதற்கென்ன செய்வது?" -

"எங்க அகத்துக்காரருக்கு, இந்தப் பெண்கள் தலை யெடுக்க எடுக்க, கவலை அதிமாய்விட்டது. அவருக்கு வேறு நோயில்லை. இந் தக் கவலை தான் அவரை இரவு பகலாக வாட்டியெடுக்கிறது. பெண்களின் கலியாணத்துக்காகவே

இவர் டியூஷன் நிறைய எடுத்திருக்கிருர், காலையில் ஐந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/42&oldid=1338458" இலிருந்து மீள்விக்கப்பட்டது