பக்கம்:தரங்கிணி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

42

மணிக்கே கிளம்பிவிடுகிரு.ர். இரவு ஒன்பது பத்து ஆய்விடு கிறது...' -

'பள்ளிக்கூடத்தில் பகலெல்லாம் பிள்ளைகளிடம் சத்தம் போட்டுவிட்டு வந்து, காலையும் மாலையும் டியூஷனும் சொல்லிவிட்டு வருவதால்தான், உன் அகமுடையான் உடம்பு இப்படிக் கெட்டுவிட்டிருக்கு: பாவம்...'

காமாட்சி ஏதோ சொல்ல வாய் திறந்தாள். இத் தருணத்தில், பரமசிவம், “காமு, காமு’ என்று கூப்பிடுங் குரல் கேட்கவே, "இருங்கள், பாட்டி; இதோ வந்துவிடு கிறேன்” என்று கூறியவாறே, எழுந்து போகலாள்ை.

"அவரைப் போய்க் கவனி. நான் நாளை வருகிறேன்" என்று கூறிவிட்டு, லட்சுமி பாட்டி தன் வீட்டுக்குப் புறப்

பட்டாள்.

B

அன்று சனிக்கிழமை; பிற்பகல் நாலரைமணியிருக்கும். நாட்டுச் சுப்பராய முதலி தெருவில், கனகராயர் இல்லம்' என்று, பொன்னிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சலவைக்கல் பதித்த முகப்புடைய ஒர் அழகிய வீட்டினுள், இரு இளம் பெண்கள் கலகலவெனச்சிரித்துப் பேசிக்கொண்டே நுழையலானர்கள்.

அவர்களில் ஒருத்தி, "அம்மா, யார் வந்திருக்கிறது பார்த்தீர்களா?' என்று குரல் கொடுத்துக் கொண்டே போனள். உடன்போன பெண், உள் வாசலில் நுழை கையில், சிறிது தயங்கி நிற்கலானள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/43&oldid=1338459" இலிருந்து மீள்விக்கப்பட்டது