பக்கம்:தரங்கிணி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

43

"ஏண்டி, பின்தங்குகிருய்? வாடி உள்ளே!" முன்னே போனவள் திரும்பி, இவளேக் கையை பிடித்து அழைத்துச் சென்ருள்.

அப்போதுதான் உள் அறையிலிருந்து கூடத்துக்கு வந்த 45 வயது மதிக்கத்தக்க மாதொருத்தி, "யாரது?” என்று கேட்டுக்கொண்டே, கீழிறங்கியிருந்த மூக்குக் கண்ணுடியைப் பார்வைக்குச் சரியாகத் தள்ளிவிட்டுக் கொண்டு, தன் மகளுடன் வந்த பெண்ணை நோக்கினுள்.

"ஓ! அடிக்கடி சொல்வாயே தரங்கிணி, தரங்கிணி என்று! அந்தப் பெண்ணு?...... வா அம்மா குழந்தை; வா,' என்று முகமலர்ச்சியுடன் வரவேற்ருள். தரங்கிணி நாணத்தால் தலைகுனிந்து கொண்டாள். ஆனால், அவளு டைய மலர்க்கரங்கள், முன்னே லேசாக நரைத்திருக்கும் தலைமயிர்கள் பறந்து முகத்தில் விழ, அவற்றைத் தள்ளிக் கொண்டிருந்த அந்த அம்மாளுக்கு, வணக்கஞ்செலுத்தின.

இதற்குள், உள்ளே சென்று ஒரு ஜமக்காளத்தை எடுத்துவந்து விரித்துப்போட்ட காதரீன், 'எடுத்ததற் கெல்லாம் வெட்கப்படுவாய்; வந்து உட்காரடி இப்படி’ என்று சொல்லித் தரங்கிணியைப் பிடித்து இழுத்து, உட்கார வைத்தாள்.

- "என்ன குழந்தை, உனக்கு வெட்கம்? இதை உன் வீடு மாதிரியே நினைத்துக்கொள்: ஆமாம்” என்று கூறியவாறே. செல்லம்மாள், தரங்கிணி பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். "காதரீன் உன்னைப்பற்றி எங்களிடம் ரொம்பச் சொல்லி யிருக்கிருள். அவள் பேச்சில் உன் பெயர் அடிபடாத நாள் கிடையாது. அவர்கூட உன்னைப் பார்க்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். சற்று முன்பாகத்தான் வெளியே போளுர்; சீக்கிரம் திரும்பிவிடக்கூடும்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/44&oldid=1338460" இலிருந்து மீள்விக்கப்பட்டது