பக்கம்:தரங்கிணி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

44

செல்லம்மாள் ஓசையோடு இழுத்து இழுத்துப் பேசும் போது, காதுகளில் அணிந்திருந்த பாம்படம் அழகாக ஆடலாயிற்று. கொட்டடிச் சேலையை அந்தம்மாள் உடுத் திருந்த விதம், அவர்கள், தென்பாண்டி நாட்டைச் சேர்ந் தவர்கள் என்பதைத் தெரிவித்தது.

"ஆமாம், தரங்கிணி! நீ அப்பா வந்த பிறகுதான் போக வேண்டும். அவர் உன்னைப் பார்த்தால் சந்தோஷப் படுவார்.”

காதரீன் சொன்னாள், பின், அவள் தாயை ஜாடை , காட்டி, உள்ளே அழைத்துச் சென்ருள்.

தரங்கிணி இப்போதுதான் நிமிர்ந்து உட்கார்ந்தாள். அவளுடைய கருவிழிகள் நாலாபக்கமும் பார்க்கலாயின.

வீடு முழுதும் தும்பு துாசியின்றித் துப்புரவாகக் காணப்பட்டது. தப்பித்தவறி ஒரு கிழிந்த காகிதத்துண்டு கூடத் தரையில் இல்லாததைக் கண்டு அவள் வியப்படைந் தாள். மேஜை நாற்காலிகளும் மற்றச் சாமான்களும் அவையவை இருக்கவேண்டிய இடத்தில் ஒழுங்காக இருந் தன. சுவர்களில் கூட நறுக்குத் தெறித்தாற்போல நாகலந்து படங்களும், காலண்டர்களும் மாட்டப்பட்டிருந்தன. ஜன்னல்களுக்கும் கதவுகளுக்கும் அழகிய திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. கூடத்தின் இரு பக்கமும் உள்ள அறைகளில்கூட,அவசியமாக உபயோகப்படக் கூடிய சாமான்களைத் தவிர, வேறெதுவும் இல்லை. வீட்டை நன்ருக வைத்துக்கொள்ளுவதில், அவர்கள் எவ்வளவு சிரத்தையாயிருக்கிருர்கள் என்பதை அறிந்து, தரங்கிணி, குடும்பத் தலைவியான செல்லம்மாளே மனத்துக்குள் பாராட்டினுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/45&oldid=1338461" இலிருந்து மீள்விக்கப்பட்டது