பக்கம்:தரங்கிணி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

45

சுவரில் மாட்டப்பட்டிருந்த படங்கள், பெரும்பாலும் இயற்கைக் காட்சிகளைக்கொண்டவை. மேல்விட்டத்துக்கு அருகில் மட்டும் கிறிஸ்து பெருமானின் திருவுருவப் படங் கள் மூன்று மாட்டப்பட்டிருந்தன. நடுவே உள்ள பெரிய படத்தில், ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட, உள்ள முருக்குந் தெய்வீகச் சித்திரம் விளங்கிக் கொண்டிருந்தது. இடது பக்கத்திலிருந்த படத்தில், வலக்கரத்தில் வளைவான பெரிய தடியொன்றைப் பிடித்துக்கொண்டு, ஏசு தம் கழுத் தில் ஆட்டிக்குட்டியொன்றைத் துரக்கித் தோளில்போட்டுக் கொண்டிருக்குங் காட்சி திகழ்ந்து கொண்டிருந்தது. வலது பக்கத்திலிருந்த படத்தில், ஏசு ஒரு பாறையின் முன் மண்டி யிட்டு அமர்த்து பாறைக்கல்மீது ஊன்றியவாறு கைகளைக் கூப்பி, எல்லாம் வல்ல இறைவனை நோக்கிப் பிரார்த்தனை செய்யும் அற்புதக் காட்டி, ஒளிர்ந்து கொண்டிருந்தது.

தரங்கினி இப்படங்கள் ஒவ்வொன்றையும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனல், அவளால் நடுவி லுள்ள பெரிய படத்தை அதிகநேரம் பார்த்துக் கொண் டிருக்க முடியவில்லை. ஏசுவின் இதயத்தில் ஒரு பெரிய ஆணி அறையப்பட்டு இரத்தமயமாகக் காணப்பட்டதை யும், இரு உள்ளங்கைகளிலும் ஆணி அடிக்கப்பட்டிருந்த இடங்களிலிருந்து இரத்தங் கசிந்து கொண்டிருந்ததையும் கண்டு, அவள் உள்ளம் உருகினள். மனிதகுலம் நல்வாழ்வு வாழவேண்டுமென்று நல்லுபதேசஞ் செய்த, ஏசுகிறிஸ்து போன்ற மகான்களைக்கூடக் கொடுமைப்படுத்திக் கொல்லக் கூடிய கொடிய மனம் படைத்தவர்கள், இக்குவலயத்தில் இருக்கிருர்களே என்று எண்ணி அவள் வருந்தினள், கல்வியும் விஞ்ஞானமும் வளர்ந்து ஓங்கி, கலை நாகரிகங் களில் மக்கள் சிறந்து விளங்குவதாகச் சொல்லப்பட்டு வரும் இந்த இருபதாம் நூற்ருண்டிலேயே. சத்தியத்தை யும் அஹிம்சையையும் அடிப்படையாகக் கொண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/46&oldid=1338462" இலிருந்து மீள்விக்கப்பட்டது