பக்கம்:தரங்கிணி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

46

இந்திய மக்களுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்து நல்வழி காட்டிய காந்தியடிகளை, பட்டப் பகலில், அதுவும் பிரார்த் தனச் சமயத்தில் சுட்டுக்கொல்ல ஒரு பாதகன் இருந்தான் என்ருல், ஏறக்குறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன், மக்கள் பெரும்பாலோர் காட்டுமிராண்டி வாழ்க்கை நடத் திக் கொண்டிருந்த காலத்தில், ஏசுபெருமானைக் கொல்வ தற்குச் சிலர் சதி செய்ததில் வியப்பெதுவும் இல்லை என்று அவள் தனக்குள் சமாதானம் செய்துகொண்டாள். ஏசு பெருமானின் கருணை பொழியும் கண்களும், சாந்தந் தவழும் திருமுகமும் தரங்கிணியின் உள்ளத்தை மிகவும் கவர்ந்தன. நல்லாயனை ஏசு சின்னஞ்சிறு ஆட்டுக் குட்டி யைத் தம் தோளில் தாங்கிக் கொண்டு, தடியைப் பிடித்துக் கொண்டு நடக்குங் காட்சியையும், நீல வானத்தை எட்டிப் பார்க்கும் மலை முகட்டில் ஏகாந்தமாக இருந்து மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்யுங் காட்சியையும், அவள் மாறிமாறிப் பார்த்துக் கொண் டிருந்தாள்.

இச் சமயத்தில், யாரோ வெளியிலிருந்து வருவது போல் அரவங் கேட்டது. ஜோஸப்தான், சைக்கிளை நடை சுவரோரத்தில் சாத்திவிட்டு உள்ளே வந்தான். கூடத்தில் ஒரு பெண் தனியாக அமர்ந்திருப்பதைக் கண்டு ஆச்சரியங் கொண்டான். உள் வாசலில் நுழையும் முன்பு கதவோரத் தண்டை சிறிது நேரம் நின்று. அவள் யார் எனக் கவனித் தான். எங்கேயோ இவளைப் பார்த்தமாதிரியிருக்கிறதே என எண்ணி ஞாபகப்படுத்திப் பார்த்தான். சில விநாடிகளில், அவனுக்கு அவள் யார் என நினைவு வந்துவிட்டது. ஆகவே, அவன், அவள் தன் வருகையைக் கண்டு மருண்டு விடக் கூடாதென்ற எண்ணத்தோடு, ஒகைப்பட்ாமல் சில ஆத்து, தரங்கிணி அமர்ந்திருந்த இடத்துக்கு எதி இலுள்ள (தெருப்பக்கமுள்ள) அறையில் துழையலாளுன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/47&oldid=1338463" இலிருந்து மீள்விக்கப்பட்டது