பக்கம்:தரங்கிணி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

47

ஏசுபெருமானின் திருவுருவப் படங்களில் தன் மனத் தைப் பதித்திருந்த தரங்கிணிக்கு, ஜோஸப் வந்ததோ தன்னைப் பார்த்ததோ, அறையில் நுழைந்தோ சிறிதும் தெரியவில்லை. அடுத்த சில நிமிடங்களில், காதரீன் ஒரு தட்டத்தில் ஜாங்கிரி, காராபூந்தி, கேக், வாழைப்பழம் ஆகியவைகளை வைத்து எடுத்துவந்து, தரங்கிணி முன் வைத்தாள். செல்லம்மாள், வெள்ளி டம்ளரில் தண்ணிர் கொண்டு வந்தாள்.

இவற்றைக் கண்டு தரங்கிணி மருளமருள விழித் தாள். காதரீன் அவளுடன் அமர்ந்து, "சாப்பிடு, தரங்கிணி சும்மா பார்த்துக் கொண்டிருக்கிருயே!” என்று அன்போடு கூறினள்.

அப்போதும் அவள் வாய் திறந்து ஒன்றும் பேசவில்லை மீண்டும் பல நிலைகளிலுள்ள ஏசு பெருமானின் திருவுருவங் களைப் பார்க்கலானள்.

"ஒருவேளை கிறிஸ்தவர்கள் வீட்டில் சாப்பிடலாமா என்று யோசிக்கிருப் போலிருக்கு...! என்று, யோசனை யோடு செல்லம்மாள் சொன்னாள்.

"நீங்க ஒரு கர்நாடகம், அம்மா! தரங்கிணியைப்பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது. அவள் அப்படியெல்லாம் வித்தியாசம் பாராட்டுகிறவளாக இருந்தால், என்னப் போன்றவர்களுடன் சிநேகமாகப் பழகவே மாட்டாள்" என்று தரங்கிணிக்காகப் பரிந்து பேசிய காதரீன், "இவள் தயங்குவதற்கு வேறு ஏதோ காரணமிருக்கு (சிறிது யோசித்து) உம், நான் முட்டாள்தனஞ் செய்துவிட்டேன். இவள் கேக்கைத் தொடக்கூட மாட்டாள்; அதில் முட்டை கலந்திருக்கிறதல்லவா! இவர்கள் உணவு விஷயத்தில் விர சைவம். இது ஞாபகமில்லாமல், மற்றப் பலகாரங்களுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/48&oldid=1338464" இலிருந்து மீள்விக்கப்பட்டது