பக்கம்:தரங்கிணி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

1963 ஆம் ஆண்டு, குற்ருலத்துக் குளிர் சாரலிலும் அருவியிலும் மூழ்கித் தெம்புற்றுவர, கவிஞர் நண்பர்களுடன், ஆகஸ்டு மாத முதலில் போயிருந்தேன். அங்கிருக்கையில், ஏதாயினும் எழுதவேண்டும் என்று நண்பர்கள் தூண்டிக் கொண்டேயிருந்தனர். சிறிது காலமாக முத்தமிழ்க் கலைமணி யான டி. கே. ஷண்முகம் நாடகமொன்று எழுதித் தரவேண்டு மென்று கேட்டுக் கொண்டிருந்ததால், அங்கு நாடகம் எழுது வதற்குப் பிள்ளையார் சுழி போடலானேன். எங்களைப்போலவே அருவி நீராட வந்த நண்பர்களின் சந்திப்பாலும் உரையாட வாலும், என்னுல் தொடர்ந்து எழுத இயலாமல் போய் விட்டது.

சென்னை திரும்புகையில் தேக்கடிக்குப் போளுேம். அங்கு ஆரண்ய நிவாஸில் தங்கியிருக்கையில், இந்தப் பயணத்தில் உருப்படியாக ஒன்றும் எழுத முடியவில்லையே என்ற ஆற்ருமை என்க்கு ஏற்பட்டது. அதன் விளைவாக, அன்றிரவு எல்லோரும் துரங்கியபின் நான் எழுத உட்கார்ந்தேன். 10 மணியிலிருந்து 12 மணிக்குள் சாரதா என்ற சிறுகதை உருவாயிற்று. நான் இதை எழுதும்போது: பிரச்னைக்குரிய கதையாக அமையும் என எதிர்பார்க்கவில்லை. காலையில் இக்கதையை எடுத்துப் பார்த்த நண்பர்கள், இதுபற்றிப் பலமாகச் சர்ச்சை செய்யத் தொடங்கி விட்டனர். இச் சிறுகதை சிறந்த முறையில் அமைந்துவிட்டது. நீண்ட காலத்துக்குப் பின் உங்களிடமிருந்து ஒரு நல்ல கதை தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்துவிட்டது. ஆனல், கதையி லுள்ள கருப்பொருளே எங்களால் அப்படியே ஏற்க முடிய வில்லையே எனத் தெரிவித்தனர். பின், இக்கதை 'அமுதசுரபி" என்ற இலக்கிய இதழில் செப்டம்பரில் வெளியானதும், எழுத் தாள் நண்பர்களும் வாசகர்களும், பலவிதமான கருத்துக்களை வெளியிட்டனர். என்ன நிலை ஏற்பட்டாலும், சாரதா போன்ற இந்துப் பெண்ணுெருத்தி வேறுமதத்தினனை மணக்க நினைப்பது iரவேற்கத் தக்கதல்ல என்பது பெரும்பாலோருடைய அபிப் பிராயம். பிரத்தியட்ச வாழ்க்கையில் ஆப்படி நடந்து வரு கிறதே! அதை எப்படி இலக்கியத்தில் பிரதிபலிக்காமல் இருத்த முடியும்? என்று நான் நண்பர்களைக் கேட்டேன். நண்பர்களில் ப்லர் சமாதானமடையவில்லை.

நான் அடிக்கடி போய் வரும் ஒரு பேட்டையில் ஒர் உயர் சாதிக் குடும்பம்-படித்துள்ள பண்புள்ள குடும்பம். அத் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண்மணிக்கு நீண்டகாலமாகத் திருமண்மாகாமல் இருந்தது. அப் பெண்ணின் தந்தை, ஏழை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/5&oldid=575195" இலிருந்து மீள்விக்கப்பட்டது