பக்கம்:தரங்கிணி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

49

செல்லம்மாள் சிறிது பேசியதுமேமேல் மூச்சு வாங்கிய தால், சில விநாடிகள் நிறுத்தி, மீண்டும் பேசலாள்ை: "கிறிஸ்தவர்கள் என்றதுமே இந்துக்களாகிய உங்களில் பலருக்கு இளப்பமான எண்ணம் என்பது எனக்குத் தெரி யும். ஏனென்ருல், நம் தமிழ் நாட்டில் கிறிஸ்தவர்களா யிருப்பவர்கள், பெரும்பாலும் உயர்ஜாதியினரால் பலவித மாகக் கொடுமைப்படுத்தப்பட்டுவந்த தாழ்த்தப்பட்ட வகுப்பாரும், பிற்போக்கு சமூகத்தாரும்தான். ஆண்ட வனக் கோயிலில் போய்த் தொழுவதற்குக்கூடத் தங்களுக்கு உரிமையில்லாததால், அவர்கள் மனம் நொந்து கிறிஸ்தவர்களாகவும் முகம்மதியர்களாகவும் மாறியிருக் கின்றனர். இதை யாரும் மறைக்க முடியாது. இதுவன்றிச் சிலர் உயர்ந்த உத்தியோகத்துக்காகவும், பணவசதியைப் பெறுவதற்காகவும், காதலை யுத்தேசித்தும் மதம் மாறி யிருக்கின்றனர். ஆனல் நாங்கள் அப்படியல்ல; நாங்கள் கார்காத்த வேளாளர்கள்; திருநெல்வேலிப் பகுதியைச் சோந்தவர்கள். எங்கள் மூதாதையர் கிறிஸ்தவ மதத் திலுள்ள சிறந்த கொள்கையால் கவரப்பட்டே சேர்ந்திருக், கின்றனர். நம்முடைய பாவங்களைப் போக்குவதற்காகவே ஏசுகிறிஸ்து இப்பூவுலகில் அவதரித்திருக்கிருர், நமக்குப் பாவமன்னிப்பு அளிப்பதற்காகவே தேவகுமாரன் நம் மிடையே தோன்றினர் என்பதை நம்பி, நாங்கள் கிறிஸ்து வர்களாக இருந்து வருகிருேம்... . - -

இதனிடையே பலகாரத் தட்டை உள்ளே கொண்டு போய் வைத்துவிட்டு வந்த காதரீன், "அம்மா. என்ன பெரிய சங்கீர்த்தனம் செய்கிருப் போலிருக்கிறதே......" என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். -

செல்லம்மாளின் பேச்சை இடைமறித்து ஏதோசொல்ல வந்த தரங்கிணி, காதரின் குறுக்கீட்டால் சிறிது நின்று பின்

- -.... ..... ... ... ويسميتي *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/50&oldid=1338466" இலிருந்து மீள்விக்கப்பட்டது