பக்கம்:தரங்கிணி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

58)

பேசத் தொடங்கிள்ை: "அம்மா, நீங்கள் கொண்டுவந்து கொடுத்த பலகாரத்தை நான் சாப்பிடாததால், ஏதோ மனத்தில் நினைத்துக்கொண்டு பேசுகிறீர்கள். நீங்கள் நினைக் கிருப்போல், நாங்கள் ஜாதி மதவெறி பிடித்தவர்களல்ல; குறுகிய மனப்பான்மையும் உடையவர்களல்ல. பொதுவா கவே, எங்கள் இந்து மதம் எம்மதமும் சம்மதம் என்று ஏற்றுக் கொள்ளும் இயல்புடையது; உலகிலுள்ள எல்லா மதங்களிலும் ஏதாயினும் ஒர் உண்மை இருக்கும், சிறந்த தத்துவம் இருக்கும் என்று எண்ணி மதித்து வருவது. எங்கள் மகான்கள், ஞானிகள், எல்லோருமே சமரச ஞானத்தைப் போதித்து வந்திருக்கிருர்கள். உலகமக்கள் அனைவரையும் சகோதரர்களாகப் பாவிக்க வேண்டும்; சமத்துவமாக நடத்த வேண்டும்; சகல ஜீவராசிகளிடத் திலும் அன்பும் இரக்கமும் காட்டவேண்டும் என்று உப தேசித்துச் சென்றிருக்கிருர்கள். வேற்றுமையில் ஒற்றுமை யும், பன்மையில் ஒருமையும் காணவேண்டும் என்று அவர்கள் பயிற்சி யளித்திருப்பதால், சமயப்பொறை, அதாவது சகல மதங்களுக்கும மதிப்பளித்துப் போற்றுவது என்ற பெருங்குணம், எங்களிடம் உள்ளதுபோல உலகில் வேறு எப்பகுதி மக்களிடமும் காணமுடியாது. ஆமாம்-’

"தரங்கிணி நன்ருகப் பேசுகிருளே' செல்லம்மாள் வியப்புடன் சொன்னுள்.

"எங்கள் பள்ளி இலக்கிய மன்றக் கூட்டங்களில் பேசு வதில்கூட இவள்தான் முன்னணியில் நிற்பாள்; இவள் பேசினல்கூடப் பாடுவதுபோல்தான் இனிமையாக இருக் கும். இவள் பேசும்போது கூர்ந்து கவனியுங்கள்; வீணை மீட்டுவதுபோல் ஒலிப்பதைக் கேட்கலாம்.'

தரங்கிணியின் முகம் நாணத்தால் சிவந்தது. "எப்போதும் என்னைக் கேலிசெய்வதுதான் காதரீனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/51&oldid=1338467" இலிருந்து மீள்விக்கப்பட்டது