பக்கம்:தரங்கிணி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

5i

வேலை, அம்மா!' என்ற பீடிகையுடன், அவள் மீண்டும் பேசலாள்ை: "நீங்கள் கேளுங்கள், நான் சொல்ல வந்த தைச் சொல்லி முடித்துவிடுகிறேன். நீங்கள் சொல்லியது போல், எங்களில் சிலர் அறியாமை காரணமாக, எங்கள் மதத்தின் உண்மைத் தத்துவத்தை உணர்ந்து கொள் ளாதது காரணமாக, பிற மதங்களைப் பற்றித் தவருக நினைக்கலாம்; சொல்லலாம். ஆனல், பெரும்பாலோர் அப்படியில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண் டும். நாங்கள் வைதீகமதத்தை மேற்கொண்டிருப்பவர் கள்; ஆனாலும், என்னுடைய தந்தையார் பரந்த மனப் பான்மை கொண்டவர். அவர் மறந்துங்கூடப் பிற ஜாதி யாரைப் பற்றியோ, பிற மதத்தாரைப் பற்றியோ இழி வாகப் பேசமாட்டார். அந்தக் குணம் பிள்ளைகளாகிய எங்களுக்கும் உண்டு. அதிலும் மனம் ஒத்தால் இனம் ஒத்துவிடும் என்பார்கள். காதரீனே நான் உடன்பிறந்த சகோதரியாக மதித்துப் பழகிவருகிறனே யொழிய, வேறு விதமாகக் கருதி நடக்கவில்லை. அப்படியிருந்தால், பள்ளிக் கூடத்தளவில் எங்கள் தொடர்பு நின்றுவிட்டிருக்கும்.”

"பரவாயில்லையே தரங்கிணி பெரிய மனுஷி போலல்லவா பேசுகிருள்? வயதான எனக்குக் கூடத் தெரியாத விஷயங்களல்லவா அவள் வாயிலிருந்து வருகின்றன?”

செல்லம்மாள் பாராட்டிப் பேசிள்ை. இச் சமயம் வெளிவாசலண்டை ஏதோ அரவம் உண்டாயிற்று. பேச்சு சுவாரஸ்யத்தில், இதை யாரும் கவனிக்கவில்லை.

"கிறிஸ்து பெருமானப்பற்றி எங்கள் பெரியோர் பேசி வரும் அபிப்பிராயங்களைக் கேட்டிருக்கிறீர்களா? காந்தியடிகள், சமயம் நேரும்போதெல்லாம் ஏசுவின் பெருமையைப் பலபடப் பேசியும் எழுதியும் வந்தார். அவருடைய பிரார்த்தனேக் கூட்டங்க்ளில் ஏசுபிரானின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/52&oldid=1338468" இலிருந்து மீள்விக்கப்பட்டது