பக்கம்:தரங்கிணி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

52

பொன் மொழிகளைச் சொல்லாத நாளில்லை. மகாகவி பாரதியார்கூடக் கிறிஸ்து பெருமானக் குறித்துப் போற்றிப் பாடியிருக்கிரு.ர்......" தரங்கிணி தொடர்ந்து பேசிளுள்.

அப்படியா? செல்லம்மாள் வியப்புடன் கேட்டாள். "ஆமாம். எங்கப்பா எத்தனையோ தடவை எங்க ளுக்குப் படித்துச் சொல்லியிருக்கிரு.ர்......"

'பாரதியார், எங்கள் ஏசுகுறித்துப் பாடியிருக்கும் பாட்டை ஞாபகம் இருந்தால் சொல்லேன், தரங்கிணி"

தரங்கிணி நெற் றியை விரல்களால் வருடியவாறு யேர்சிக்கலாள்ை. அடுத்த சில நிமிடங்களில், அவளுடைய குமுத வாயிலிருந்து பின்வரும் அடிகள் வெளி வரலாயின.

'உண்மை யென்ற சிலுவையிற் கட்டி

உணர்வை ஆணித் தவங்கொண்டு அடித்தால் வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து

வான மேனியில் அங்கு விளங்கும்' காதரீன் கேட்டாள், 'ஏண்டி. தரங்கம்! நீ இதுவரை சொன்னதே யில்லையேடி, பாரதியார் இப்படி ஏசு பெரு மானைப்பற்றிப் பாடியிருக்கிருர் என்று?" to "சந்தர்ப்பம் ஏற்படவில்லை."

"குழந்தை, அந்தப் பாட்டை இன்னொரு முறை சொல்லு' என்று செல்லம்மாள் கேட்டுக்கொண்டாள்.

தரங்கிணி அந்நான்கு அடிகளையும் மீண்டும் ஒருமுறை நிதானமாகச் சொன்னாள்.

'இதைப் பாடுவதற்கென்னடி, தரங்கம்! எங்களைப் போலச் சாதாரணமாகப் படிப்பதுமாதிரிச் சொல்லு கிருயே! பாட்டைப் படிக்கக்கூடாது; பாடவேண்டும் என்று நீ எங்களுக்கு அடிக்கடி அறிவுறுத்துவாயே? இப்போது நீ மட்டும்- ஒ: வெட்கமோ? பரவாயில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/53&oldid=1338469" இலிருந்து மீள்விக்கப்பட்டது