பக்கம்:தரங்கிணி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

53

இப்பாட்டைப் பாட்டி, கேட்போம். இங்கே வேறே யார்

இருக்கிருர்கள்?"

"ஆமாம், குழந்தை; பாடு; கேட்கலாம்' செல்லம் மாளும் ஆசையோடு கேட்டாள். -

தரங்கிணி தொண்டையைச் சரிப்படுத்திக் கொண்டு, அப்பாடல் அடிகளே நாதநாமக்கிரியைராகத்தில் பாடினள். பின் அவள், 'பாரதியார் இதுபோன்று மூன்று பாடல்கள் பாடியிருக்கிருர். நீங்கள் இவ்வளவு ஆர்வமாகக் கேட்ப தால், அவற்றில் முக்கியமான ஒன்றை நானே பாடுகிறேன்: கேளுங்கள்..."

தாயும் மகளும், பாடு தரங்கம், பாடு" என்று ஒரே சமயத்தில் சொன்னர்கள். - தரங்கிணி, நீலாம்புரி ராகத்தில் பாடத் தொடங்

'ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்

எழுந்து உயிர்த்தனன் நாள்.ஒரு மூன்றில்: நேசமா மரியா மக்த லேங்ா

நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்: தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்;

தேவர் வந்து நமக்குட் புகுந்தே நாசமின்றி கமை நித்தங் காப்பார்

நம்அகந்தையை நாம் கொன்று விட்டால். அவளுடைய உள்ளம் அப் பாட்டின் பொருளிலும் இசையிலும் லயித்துப் போய்விட்டது என்பது, அவள் சிலுவையில் அறையப்பட்ட ஏசு கிறிஸ்துவின் திருவுருவப் படத்தின்மீது, தன் கயல் கண்களைப் பதித்தவாறு. பரவச நிலையில் இருந்ததிலிருந்து தெரிந்தது. . . . .”

'ஆஹா பாட்டும் அபாரம், பாடப்பட்ட இசையும் அபாரம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/54&oldid=1338470" இலிருந்து மீள்விக்கப்பட்டது