பக்கம்:தரங்கிணி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

54

இவ்விதஞ் சொல்லிக்கொண்டே காதரீனின் தகப்ப ஞர் உள்ளே நுழைந்தார். அவர் மேல் உத்தரீயத்தை எடுத்துச் சுவர் மூலையிலிருந்த கொக்கி யொன்றில் மாட்டியவாறு, 'ஏன் காதரீன், நீ அடிக்கடி சொல் வாயே! உன் அருமைச் சிநேகிதி தரங்கிணி என்று; அந்தப் பெண் இவள்தான? எனக் கேட்டார். "மிகச் சூட்சுமமான புத்தி, நல்ல சங்கீத ஞானம். இவள் பேச்சும் பாட்டும் என்னை அப்படியே உலுக்கிவிட்டன. இவள் உங்களுடன் பேசியதையெல்லாம் நான் நடையி லிருந்தவாறு கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்.

சந்தோஷநாதம் பிள்ளையின் வருகையைக் கண்டதும், தரங்கிணி திடுக்கிட்டு எழுந்து விட்டாள்.

"பரவாயில்லை, குழந்தை, உட்காரு' என்றமர்த்திய

பிள்ளையவர்கள், "நீ இப்படி என்னைப் பார்த்ததும் சங்கோசப்பட்டுப் பேச்சை நிறுத் திவிடுவாய் என்று தான், நடையிலேயே நின்றுவிட்டேன், சிறிது நேரம்” என்ருர்.

இதற்குள், செல்லம்மாள் எழுந்துபோய்க் கணவன் கால் அலம்ப ஒரு செம்பில் தண்ணிர் கொண்டு வந்து கொடுத் தாள்.

"குழந்தை, நீ குறிப்பிட்ட பாரதி பாடல்கள் மூன்றை யும், உனக்கு அவகாசம் ஏற்படும்போது காதரீனிடம் எழுதிக் கொடுத்தனுப்பு; என்ன? என்று கேட்டுக்கொண் டார், சந்தோஷநாதம் பிள்ளை.

'அதற்கென்ன! நாளைக்கே எழுதிக் கொடுத்தனுப்பு `றேன், ஐயா!'

காதரின் தரங்கிணியை உட்காரச்சொல்லி வற் றுத்தினுள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/56&oldid=1338472" இலிருந்து மீள்விக்கப்பட்டது