பக்கம்:தரங்கிணி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

56

மீன்களைக் கொத்திச் செல்ல வட்டமிட்டவாறு கூச்சலிடும் அரவத்தையும், நடுக்கடலில் பெரிய படகிலும் கட்டு மரங் களிலும் சென்று பெரிய வலைகளை வீசிச் சிறியதும் பெரியது மான மீன்களைப் பிடித்துக்கொண்டு வந்து கரையில் குவித் துப் போட்டவாறு மீனவர்கள் விநோதமாகச் சத்தஞ் செய்வதையும், அவற்றைச் செம்படவப் பெண்கள் தங்கள் கூடைகளில் அள்ளிப் போட்டுக்கொண்டே கடற்கரையி லேயே வாங்க வந்தவர்களிடம் விலை கூறி ஆர்ப்பாட்டஞ் செய்வதையும், இவற்றுக்கும் மேலாக அமைதியுடன் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் காணப்பட்ட நீலக் கடலின்மீது காற்று அடிப்பதல்ை எழுதி அலைகளையும், கரை புரண்டுவரும் அலைகளின் நுரைசெய்யும் ஆரவாரத் தையும், பஸ்ஸில் பிரயாணஞ் செய்தவாறே தரங்கிணி முதலிய சங்கீத மாணவிகள் கண்டும் கேட்டும் வந்து கொண்டிருந்தனர்.

தரங்கிணியுடன் பிரயாணஞ் செய்துவந்த மாணவி சுள் ஒவ்வொருவராக மந்தவெளிப்பாக்கத்திலும், அப்பு முதலித் தெருமுனையிலும், சாந்தோம் சர்ச் எதிரிலும் இறங்கிப் போயினர். ஆதலால், இவள் மட்டுமே அகில இந்திய ரேடியோ நிலையத்தண்டையுள்ள பஸ் ஸ்டாப்பில் இறங்கிளுள். பிளாட்பாரத்தின்மீதே அவள் மெல்ல நடந்து, காரணிசுவரர் கோயில் தெருவழியாகத் திரும்ப லாஞள். அவ்விதம் நடக்கையில், அவள் அன்று சங்கீதப் பள்ளியில் கற்றுக்கொடுத்த புதிய கீர்த்தனையையும் தனக்குள்ளாகவே சாதகஞ் செய்துகொண்டு போக லாஞள். இந்நிலையிலேயே சில கஜதாரம் அவள் நடந் திருப்பாள். "கினுகினு என்று மன்னியடித்தவாறு, ஒரு சைக்கிள் அவளைப் பின் தொடரலாயிற்று. பர்ட்டுக் கவனத்தில் நாம் விதியின் நடுவே போய்விட்டோமோ என்று தரங்கினி எண்ணி, சைக்கிள் போக இடந் தரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/57&oldid=1338473" இலிருந்து மீள்விக்கப்பட்டது