பக்கம்:தரங்கிணி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

57

நோக்கத்தோடு ஒதுங்கி நடக்கலானள். ஆன ல், அவள்

ஒதுங்கிச் செல்லச்செல்ல, அச்சைக்கிளும் ஒதுங்கி,அவளைப் பின் தொடரலாயிற்று. இதென்னடா, தொந்திரவு? என்று, தரங்கிணி ஒரேயடியாக ஒதுங்கி நின்றுவிட்டாள். அந்தச் சைக்கிள் முன்னே போகட்டும் என்ற எண்ணத்

துடன். ஆனால், முன்னே போன அச்சைக்கிள் மறுபடியும் அவள் பின்னல் வரலாயிற்று. அவளுக்கு முன்னும் பின்னு

மாகப் போவதும் வருவதுமாக, அச்சைக்கிளேச் செலுத்திக்

கொண்டிருந்த வாலிபன் ஆட்டங்காட்டலானன். அவ்

விதம் அவ்னை அலைக்கழித்தவன் வேறு யாருமன்று; காத

v.

ரீனின் சின்ன அண்ணனை ஜோஸப்பே யாகும்.

அவனைக் கண்டதும் தரங்கிணி திடுக்கிட்டுப் பயந்து போனள். ஜோஸப் அவளைப் பார்த்து, அசட்டுச் சிரிப்புச்

சிரித்தான்.

'கிண்கிணி, ரொம்ப துரம் போய் வருகிருயா?" w தரங்கிணி அதற்குப் பதில், சொல்லவுமில்லை; அவனைத் திரும்பிப் பார்க்கவுமில்லை. -

"எங்கே, உங்க ரெட்டைவால் கூட்டம் எதையும் காணுேம்? தணியாகவே கிளம்பிவிட்டாயே?'

தரங்கிணி மூச்சு விடவில்லை; வேகமாக நடக்க லாளுள்.

"கிண்கிணி, இப்படி என்னைத் திரும்பிப் பாரேன்.

நான் உன் அருமைச் சிநேகிதி காதரீனின் சகோதர

னில்லையா? உன்னிடம் ஒரு வார்த்தை பேசக்கூடாதா?”

இவன் இவ்விதம் பேசப் பேச, தரங்கிணியின் நடை

யில் வேகம் அதிகமாயிற்று, அவள் கீர்த்தனம் பாடுகையில்

போடும் சுரம் துரிதகாலத்தில் சஞ்சரிப்பதுபோல. ஜோஸப் பும், தன் சைக்கிளை அவள் நடைக்கேற்றவாறு வேகமாக

விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/58&oldid=1338474" இலிருந்து மீள்விக்கப்பட்டது