பக்கம்:தரங்கிணி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாயிருந்ததுதான் இதற்குக் காரணமாகும். நற்குணமும் ஒழுக்கமுமுள்ள. அப்பெண், ஒரு கிறிஸ்துவ இளைஞனைக் கலியாண்ஞ் செய்துகொண்ட செய்கி, ஒருநாள் என் செவியில் விழுந்தது. இது என் நெஞ்சை நெகிழவைத்துவிட்டது. அப். பெண், அக் கிறிஸ்தவ வாலிபனைக் காதலித்தோ, அல்லது கிறிஸ்தவமதக் கொள்கைகளால் கவரப்பட்டோ கலியாணன் செய்து கொண்டிருந்தால், அதை நான் மகிழ்ச்சியோடு வரவேற்றிருப்பேன். ஆனால், அப் பெண், அவ்விதம்ாகக் கலி யாணஞ் செய்துகொண்ட்தாகத் தெரியவில்லை. தான் பெற் ருேருக்கு மேலும் பாரமாக இருக்கக்கூடாதென்றே, அவ்விதம் சர்தி மாறி, மதம் மாறினுள் என அறிந்தேன். இச்சம்பவத்தின் மீது எழுந்த சிந்தனை, நெடுங்காலமாக் என் உள்ளத்தின் ஒரு மூலையில் துயின்று கொண்டிருந்தது. அதுதான், தேக்கடி ஒட்டலில் நான் உறக்கங்கொள்ளாத அன்று, என் சிந்தனையி, லிருந்து சாரதாவாக எழுந்து வெளிவந்தது. இந் நிகழ்ச்சி குறித்து நான் சிந்தித்து வந்ததுபோலவே, சமுதாயத்தையும் சிந்திக்கவைக்க வேண்டுமென்பதுதான் என் விருப்பம்.

நான்,சமுதாயத்தில் காண்பதை, கேட்பதை, உணர்வதை, ஊகிப்பதைக் கதைகளாக்கித் தருவது என் வழக்கம். சமுதா யத்தில் எத்தனையோ பிரச்சினைகள் எழுகின்றன; மறைகின்றன. நான், சமுதாய நிலையை, அதன் மாறுதலை மட்டும் பார்ப்ப தில்லை; கால மாறுதலையும் கவனித்து வருபவன். சமுதாயப் பிரச்சினைகள் பல கால மாறுதலுக்கு ஏற்ப மாறிக்கொண்டே போகின்றன. ஆளுல், பெண்கள் பிரச்சினையும், பெண்களைப் பெற்றவர்களின் பிரச்சினையும், முக்கியமாகத் திருமணப் பிரச் சினையும் என்றும் மாருதவையாக இருக்கின்றன. எனவே, பெண்களின் திருமணப்பிரச்சினைதான் என் கவனத்தில் அடிக் கடி தென்படுகின்றது. இப்பிரச்சினையில் அவ்வப்போது எழும் சிந்தனைகள்தாம், பல கதைகளாக உருக்கொள்ளுகின்றன.

"சாரதா சிறுகதை அவ்வகையில் எழுந்த ஒன்று. இக் கதைமீது, பல எழுத்தாளர்களும் வாசகர்களும் எழுப்பிய வாதப் பிரதிவாதங்களின் பயணுக உருவான கதைதான், 'தரங்கினி' என்னும் இந் நாவலாகும்.

"ஜீவோதயம்’ } நாரண-துரைக்கண்ணண் சென்னை-94 20–1—64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/6&oldid=575196" இலிருந்து மீள்விக்கப்பட்டது