பக்கம்:தரங்கிணி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

59

வருவதைக் கண்டு, தரங்கிணிக்கு அழுகையே வந்து விட்டது. யாராயினும் பார்த்தால் ஏதாயினும் நினைத்துக் கொள்வார்களே என்ற எண்ணத்தால், அவள் மிகச் சிரமப்பட்டுத் துக்கத்தை அடக்கிக் கொண்டாள்.

கிண்கிணி, நீ என்னிடம் பேசக்கூட வேண்டாம். உன் குமுத வாயைத் திறந்து ஒரு பாட்டுப் பாடிவிடு. நான் கேட்டுவிட்டுப் போய் விடுகிறேன். பாடமாட்டாயா, இண் இணிை?’’

அவ்விதம் கேட்டுக்கொண்டே ஜோஸப், சைக்கிளைத் தரங்கிணியை உராய்ந்து கொண்டு போவது போல் மிக நெருக்கமாகச் செலுத்தினன். தரங்கிணி கதிகலங்கிப் போய்விட்டாள். அடுத்த கணம், அவன், அவள் மோவா யைப் பிடித்து விட்டிருப்பான். .

இச்சமயம், இரு பக்கங்களிலிருந்தும் மக்கள் வரலா யினர். ரிக்ஷாக்களும், சைக்கிள்களும், கார்களும் வந்து கொண்டிருந்தன. ஆகவே ஜோஸப், தரங்கிணியை விட்டு விட்டுச் சிறிது தள்ளித் தன் சைக்கிளை ஒட்டின்ை.

தன்னை இந்த ஆபத்திலிருந்து காப்பாற்றுமாறு. தரங்கிணி இறைவனை மனத்தில் தியானித்த வண்ணம், மறுபக்கத்தில் ஒரமாகப் போகலாஞள். 12-ம் எண்ணுள்ள வீட்டிலிருந்து, யாரோ ஒரு மாது, இவளைப் பார்த்து விட்டு, "தரங்கம், தரங்கம்! சற்று இங்கே வந்து விட்டுப் போயேன்” என்று கூப்பிடலானள். தன்னை யாரோ கூப்பிடுவது கேட்டுத் தரங்கிணி நின்று பார்த் தாள். தனக்குப் பரிச்சயமான ஒரு அம்மாமிதான் அழைக்கிருர்கள் என்று அறிந்ததுமே, தனக்கு இந்த ஆபத்துச் சமயத்தில் புகல் கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சி கொண்டாள். எனவே, அவள் உடனே, "இதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/60&oldid=1338476" இலிருந்து மீள்விக்கப்பட்டது