பக்கம்:தரங்கிணி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

60

வந்து விட்டேன், மாமி என்று பதிலுக்குக் குரல் கொடுத்துக் கொண்டே, அவ் வீட்டினுள சரேலென துழைந்து விட்டாள். ஜோஸப், தான் அவ் வீட்டில் புகுவதைப் பார்த்துவிடக் கூடாது என்று, அவள் எண்ணினுள்.

ஆனல், ஜோஸப், தரங்கிணி ஒரு வீட்டினுள் நுழைவ தைக் கண்டுவிட்டான். அவள் திடீரென அவ்விதம் ஒரு வீட்டிற்குள் போவது, தன்னிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே என்று அவன் ஊகித்துக்கொண் டான். அவள் எவ்வளவு நேரம் அவ் வீட்டில் இருப்பாள்? வரட்டும், பார்க்கலாம் என்று, அவன் சிறிது நேரம் காத்திருந்தான். வெகு நேரமாகியும் அவள் வெளி வராமல் போகவே, அவன், தனக்குள் சிரித்துக்கொண்டே, தன் விடுநோக்கிச் சைக்கிளை வேகமாக விடலானன்.

E,

தரங்கிணி, சிந்து பைரவி ராகத்தை மிகவும் மெல் லத்தான் ஆலாபனை செய்தவாறு வீதியில் வந்துகொண் டிருந்தாள். ஆனலும் வேனிற்காலத்து மாலைத் தென்றற் காற்று, அவளுடைய மாதுரியமான குரல் ஒலியைச் சுமந்து சென்று, அவளது வருகையைத் தெருத்திண்ணைத் துர்ணில் சாய்ந்த வண்ணம் சிகரெட் புகைத்துக் கொண் டிருந்த ஜோஸப்புக்கு, முன்கூட்டியே அறிவித்துவிட்டது. அவள் தன் தங்கையைப் பார்க்கத்தான் வருகிருள் என்று அவன் உணர்ந்து கொண்டான். தனக்குள்ளா கவே ராக் விந்நியாசஞ் செய்து பாடி அனுபவித்துக் கொண்டு, பரவச நிலையில் மிதந்தவாறு மெல்லச் செல்லும், அவள், அச்சமயம் அவன் கண்களுக்குத் தேவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/61&oldid=1338477" இலிருந்து மீள்விக்கப்பட்டது